தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறையாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்ட ரஜினிகாந்த் சமீபத்தில் தான் தாதா சாகிப் விருதை கூட வென்று இருந்தார். இதனால் ரஜினிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். ரஜினி கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது இல்லை.தமிழ் மட்டுமல்லாது ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை நடித்து இன்றும் சினிமாவில் தனக்கான ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு மன்னர் மத்திய அரசு ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதுஅறிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தெரிவித்து இருந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  ’51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்று கூறி இருந்தார்.

Advertisement

தாதா சாகேப் பால்கே விருதை பெரும் ரஜினிக்கு தங்கத் தாமரையுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் . இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது, ஏற்கெனவே நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் தமிழ் நடிகர்களில் ரஜினி இந்த விருதை பெற்றுள்ளார். இதனால் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

ஆனால், ஒரு சிலர் தேர்தல் நெருங்கும் வேலையில் ரஜினிக்கு இந்த விருதை மத்திய அரசு அறிவித்தது ஏன் என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதே போல பலரும் ரஜினிக்கு இந்த விருது தகுதி இல்லை என்றும் குறை கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ரஜினிகும் இந்த விருது அறிவிக்கப்பட்டதை கேலி செய்பர்வர்களுக்கு விஜய்யின் சிவகாசி , திருப்பாச்சி அஜித்தின் திருப்பதி போன்ற ஹிட் படங்களை இயக்கிய பேரரசு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதாக சொன்னபோது எதிர்ப்புகள் இருந்தன! இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை அறிவித்து விட்டார்! அவருக்கு விருது கிடைத்ததற்கு இங்கே பலர் கிண்டலடித்து விமர்சனம் செய்ததை பார்க்கும்போது கேவலமான பிறவிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நன்றாக தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement