தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அஜித் அந்த படத்தில் இருந்து திடிரென்று விலகிவிட்டார். அதன் பின்னர் இவர்களது படங்களில் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்களை பேச ஆரம்பித்தனர். இதுவரை சமூக வளைதளத்தில் பிரயோஜனமே இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போட்டுக் கொண்டிருந்த விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் முதன்முறையாக ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.

Advertisement

சமீபத்தில் விஜய் ரசிகர் ஒருவர் தனது பெரியப்பாவின் சிகிச்சைக்காக ட்விட்டரில் உதவி கேட்டிருந்தார். அந்த பதவில், முதல் முறையாக உங்கள் எல்லார்கிட்டயும் ஒரு உதவி கேட்கப் போறேன். உதவி செய்ய முடியவில்லை என்றால் தயவு செய்து பகிருங்கள் இந்த வாரம் அண்ணனுக்கு திருமணம் முடிவு செய்தார்கள். அவருடைய அப்பா அதாவது என்னுடைய பெரியப்பா திடீரென்று உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடலில் ஸ்கேன் எடுத்து பார்த்தோம்.

அவருக்கு மூளையில் ரத்த கட்டி இருக்கு என்று சொல்லிவிட்டார்கள் விரைவில் சிகிச்சை பண்ணா மட்டும் தான் பிழைக்க வைக்க முடியும். சிகிச்சைக்கு 2 லட்சம் கேட்கிறாங்க நாங்க மிகவும் ஏழ்மையான குடும்பம் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்காங்க நீங்க பண்ற சின்ன உதவி குழு ரொம்ப உதவியாக இருக்கும் ப்ளீஸ் உதவுங்க என்று குறிப்பிட்டிருந்தார் .

Advertisement

மேலும் தன்னுடைய பெரியப்பாவின் மருத்துவ ரசீது மருத்துவ ரிப்போர்ட் அனைத்தையும் கூட அந்த விஜய் ரசிகர் பதிவிட்டிருந்தார். இந்தப்பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தத. இந்தநிலையில் அந்த ரசிகருக்கு பல்வேறு விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் உதவ ஆரம்பித்துவிட்டார்கள். விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அஜித் ரசிகர்களும் தாங்கள் சார்பாக 50 ஆயிரம் பணத்தை வசூல் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து AjithVijayPRIDEOfINDIA என்ற ஹேஷ் டேக் கூட ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

Advertisement
Advertisement