கலைஞர் குடும்பத்துடன் விஜய்க்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கா..? கலைஞர் மறைவுக்கு பிறகு வெளிவந்த உண்மை.!

0
258

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் விஜய் விஜய்க்கும் மறைந்த திமுக கட்சி தலைவர் கருணாநிதி அவர்களின் குடும்பத்திற்கும் ஒரு தனிப்பட்ட நெருக்கம் இருந்து வந்தது. நடிகர் விஜயின் அப்பா சந்திரசேகர் காலம் முதல் கருணாநிதி குடும்பத்தாருடன் நெருக்கமான நட்பில் இருந்து வந்துள்ளனர். ஆனால், இடைப்பட்ட காலத்தில் தான் நடிகர் விஜய்க்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் சற்று பிளவு ஏற்பட்டுள்ளது. கலைஞர் அவர்களின் குடும்பத்தை சார்ந்தது தான் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயிண்ட் பட தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் ஆரம்பித்த துவக்கத்தில் முதல் படமாக விஜய் நடித்த ‘குருவி ‘ படத்தை தான் தயாரித்தனர்.

kuruvi

ஆனால், வசூல் ரீதியாக லாபமடையவில்லை. இதனை வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் தனது முதல் படத்திலே யே பெரும் இழப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த இடைப்பட்ட காலத்தில் தான் நடிகர் விஜய்க்கும் கலைஞர் குடம்பத்திற்கும் தயாரிப்பு பிரச்சனைகள் காரணமாக சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் விஜய்யின் எந்த படத்தையும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்க முன்வரவில்லை. எனவே, குருவி படத்தின் மூலம் தான் இந்த தயாரிப்பி பிரச்சனை எழுந்திருக்கலாம் என்று யூகிக்கபடுகிறது.

அதே போல இந்த பிரச்சனைக்கு பிறகு விஜய்க்கும், கலைஞர் குடும்பத்திற்கும் மனக்கசப்பு முற்றியதால் நடிகர் விஜய், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு நேரடியாக ஆதரவு தெரிவித்திருந்தார் என்ற ஒரு காரணமும் இருக்கிறது. இருப்பினும் கலைஞர் அவர்கள் நடிகர் விஜய்க்கு ஒரு பெரிய உதவியை செய்திருந்தார்.கடந்த 2013 ஆம் வெளியான விஜய் நடித்த ‘தலைவா’ படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த படம் வெளியாகும் முன்னர் பல்வேறு அரசியல் குறுக்கீடுகளை சந்தித்தது. அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தின் தலைப்பின் கீழ் ‘time to lead ‘ என்ற வாசகம் இடம்பெற்று தான். இந்த காரணத்தினால் இந்த படம் அரசியில் கலந்த படமாக இருக்கும் என்று பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

Actor Vijay

அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களை பல முறை சந்திக்க முயற்சி செய்தபோது கூட அவரை ஜெயலலிதா பார்க்க மறுத்துவிட்டார். பின்னர் எப்படியோ ஜெயலலிதாவை சந்தித்து அந்த படத்தை வெளியிடவைத்தார் நடிகர் விஜய். நடிகர் விஜய் இந்த படத்தின் பிரச்சனைக்காக அலைந்து கொண்டிருந்த போது கலைஞர் அவர்கள், நடிகர் விஜய்க்கு ஆதரவாக ‘தலைவா’ படம் வெளியாக வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.