பாலிவுட் பிரபலங்களை பின்னுக்கு தள்ளிய விஜய், சமந்தா- வெளியான டாப் நடிகர்களின் பட்டியல்

0
941
vijay
- Advertisement -

பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலில் பாலிவுட் பிரபலங்களை பின்னுக்கு தள்ளி விஜய், சமந்தா முதல் இடம் பிடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு என்று அதிக ரசிகர் பட்டாளம் இருக்கிறது. உலகம் முழுவதும் பாலிவுட் நடிகர்களுக்கு என்று பெரும் புகழ் இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் சுக்குநூறாக உடைத்து வகையில் லேட்டஸ்டாக கணிப்பு ஒன்று வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பட்டியல்:

அதாவது,வருடம் வருடம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் ‘ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ்’ என்ற நிறுவனம் இந்தியாவில் மிகவும் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில், நடிகர் விஜய் முதலிடம் பிடித்திருக்கிறார். மேலும், டாப் 5 லிஸ்டில் தென்னிந்திய பிரபலங்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

2 பிரபாஸ்

3 யாஷ்

-விளம்பரம்-

4 அல்லு அர்ஜுன்

5 ஜூனியர் என்டிஆர்

ஒரு பாலிவுட் பிரபலம் கூட அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அந்த பட்டியலில் அதிகபட்சமாக ஆறாவது இடத்தை அக்ஷய்குமார் பிடித்திருக்கிறார்.

6 அக்ஷய்குமார்

7 மகேஷ்பாபு

8 அஜித்குமார்

9 ராம்சரண்

10 சூர்யா

பிரபலமான நடிகைகள் பட்டியல்:

அதேபோல் இந்திய நடிகைகள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் பாலிவுட் நடிகைகள் முதலிடத்தை பிடிக்க வில்லை. முதலிடத்தை தென்னிந்திய நடிகை சமந்தா பிடித்திருக்கிறார்.

2 ஆலியா பட்

3 நயன்தாரா

4 காஜல் அகர்வால்

5 தீபிகா படுகோன்

6 பூஜா ஹெக்டே

7 கீர்த்தி சுரேஷ்

8 காத்ரினா கைப்

9 கீரா அத்வானி

10 அனுஷ்கா

Ormax Media நிறுவனம் :

இதேபோல் Ormax Media நிறுவனம் 2022-ன் ஹிந்தி மொழியின் சிறந்த நிகழ்ச்சிகள் மற்றும் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்தியப் படங்களின் பட்டியலை IMDb வெளியிட்ட ஒரு வாரத்தில் இந்தப் பட்டியல் வந்துள்ளது. விக்ரம், கேஜிஎஃப் 2, தி காஷ்மீர் ஃபைல்ஸ், ஹிருதயம் மற்றும் ஆர்ஆர்ஆர் (ரைஸ் ரோர் ரிவோல்ட்) ஆகியவை 8 க்கும் மேற்பட்ட மதிப்பீடுகளுடன் டாப் லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறது. இப்படி பாலிவுட் நட்சத்திரங்கள் ஆக்கிரமித்திருந்த பிரபலமான நடிகர்கள் பட்டியலை பின்னுக்கு தள்ளி இருக்கும் தென்னிந்திய நடிகர்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement