‘ரோல்ஸ் ராய்ஸ்ல் எல்லாம் பேசிட்டே போனாங்கல்ல அண்ணே’ சைலண்டாக கலாய்த்த யோகி பாபு

0
674
- Advertisement -

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு படம் கடந்த 11 ஆம் ஆண்டு வெளியானது. அதிகாலை 11 மணிக்கு, அதிகாலை 4 மணிக்கும் வாரிசும் வெளியானது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

வாரிசு வெற்றி விழா :

மேலும் இந்த விருந்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி படிப்பள்ளி, கணேஷ், ஷாம், சரத்குமார் போன்றவர்கள் கலந்து கொண்டனர். மேலும்  சில சர்ச்சையான விமர்சனங்களை இயக்குனர் வம்சி மற்றும் சரத்குமார் கூறியது வைரலாகி இருந்தது.அந்த பதிவில் தங்களின் படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி வசூல் செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டு இருந்தது.

- Advertisement -

275 கோடி வசூல் :

இப்படி பட்டா நிலையில் வாரிசு வெளியாகி 16 நாட்களாகும் நிலையில் வாரிசு படம் குடும்ப பார்வையாளர்கள் மத்தியிலும் வின்டேஜ் விஜய்யை பார்க்க விரும்பும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் வாரிசு படம் வெளியாகி 2 வாரம் கடந்த நிலையில் சுமார் ரூபாய் 275 கோடி வசூலித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படையே சென்றால் இப்படம் விரைவில் ரூபாய் 300 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருந்து வாய்த்த விஜய் :

மேலும் வாரிசு படம் தமிழ் மொழியில் வெளியியாகி இரண்டு நாட்கள் கழித்து தெலுங்கு மொழியில் வெளியாகி அங்கேயும் நல்ல வசூலை பெற்றிருந்தது. இந்த நிலையில் தான் நடிகர் விஜய் உயர்தர நட்சத்திர விடுதியில் படக்குழுவினருக்கு விருந்து வைத்திருந்தார். இதில் சரத்குமார், ஷாம், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி படிப்பள்ளி போன்றவர்கள் கலந்து கொண்டனர். இதில் சில சர்ச்சையான நிகழ்வுகளும் நடந்தது.

-விளம்பரம்-

வைரலாகும் விஜய் வீடியோ :

இப்படி பட்ட நிலையில் தான் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யுடன், யோகிபாபு மற்றும் வாரிசு படக்குழுவினர் சிலரும் பயணித்து வருகின்றனர். இப்படி பயணம் செய்யும் போது யோகி பாபு விஜய்யிடம் “ரோல்ஸ் ராய்ஸ்ல் எல்லாம் பேசிட்டே போனாங்கல்ல அண்ணே” என்று கேட்க உடனே சுதாரித்து கொண்ட யோகிபாபு “வேணாம் நம்ம சும்மாவே போய்டுவோம்” என்று கூறுகிறார். இதனனை கேட்ட விஜய் சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் வைரலாகி வருகிறது.

யோகிபாபு – விஜய் கூட்டணி :

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு விஜய்யுடன் சர்க்கார், பீஸ்ட், மெர்சல் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களில் விஜய் மற்றும் யோகிபாபு கூட்டணி நன்றாகவே இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது வாரிசு படத்திலும் விஜய்யுடன் நடித்திருந்தார் யோகிபாபு. இப்படத்திலும் இவர்கள் இடையேயான காமெடி ரசிகர்கள் ரசிக்கும் படியாகத்தான் இருந்தது. தற்போது வைரலாகியுள்ள வீடியோ போலவே நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்திலும் விஜய் கார் ஒட்டிய வீடியோ வைரலானது குறிப்பிடதக்கது.

Advertisement