சரக்கடிக்க காஸ் இல்லன்னு அந்த மருந்த வாங்கி குடிப்பீங்களாமே – சர்ச்சை கேள்விக்கு விஜய் ஆண்டனி அளித்த பதில்.

0
350
vijayantony
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா உலகில் நுழைந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தான் அறிமுகமானார். பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார் . இவர் கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை 7 வயது இருக்கும் போதே இறந்து விட்டார். பின் இவர் தன் தாய் கவனிப்பில் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி சினிமா துறைக்குள் நுழைந்தார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் சாதித்த அஜித் போன்றே விஜய் ஆண்டனியும் திகழ்கிறார்.

-விளம்பரம்-

2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரு இசையமைப்பாளராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்து ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.

- Advertisement -

விஜய் ஆண்டனி நடித்த படங்கள்:

இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் ஆண்டனி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.

விஜய் ஆண்டனி அளித்த பேட்டி:

அதில் தொகுப்பாளர் அவரிடம் நீங்கள் பணி செய்யும் போது சரக்கு வாங்குவதற்குக் கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு இருப்பதாக சிலர் கூறி இருந்தார்கள். மேலும், அவர்கள் எல்லாம் corex தான் குடிப்பார்களாமே ? இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அதைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார். அதற்கு விஜய் ஆண்டனி கூறியிருப்பது, அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. நாங்களும் வேலை செய்யும்போது சரக்கு சாப்பிட்டிருக்கிறோம். எங்களுடன் இருந்த ஒருவர் மட்டும் தான் இந்த மாதிரி கோரக்ஸ் குடிப்பார். அவர் சலிக்காக சிறப்பு சாப்பிடுவார்.

-விளம்பரம்-

நான் சாராயம் குடிப்பேன்:

அதற்கு பதில் சாராயம் குடிக்கலாமே என்று நான் கேட்பேன். இல்லை இது வேற மாறி என்று சொல்வார். ஆனால், அவர் எதற்கு அப்படி சொன்னார்? என்று தெரியவில்லை. ஆனால், நான் சாராயம் தான் குடிப்பேன் என்று வெளிப்படையாக பேசி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்களும் என்ன மனுஷன்யா! இவ்வளவு ஓபனாக பேசுகிறாரே! உண்மையாலுமே விஜய் ஆண்டனி வேற லெவல் என்றெல்லாம் கமெண்ட் போட்டும், லைக் செய்தும் வருகிறார்கள்.

விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மழை பிடிக்காத மனிதன், கொலை, காக்கி, தமிழரசன் உட்பட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அக்சரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மூடர்கூடம் நவீன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement