இசையா? பாடலா? சர்ச்சைக்கு விஜய் ஆண்டனி கொடுத்த பதில்-என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

0
544
- Advertisement -

இசையா? பாடலா? என்ற சர்ச்சைக்கு நடிகர் விஜய் ஆண்டனி கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். அதன் பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இதற்கு பலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து இருந்தார்கள்.

- Advertisement -

வைரமுத்து சொன்ன சர்ச்சை கருத்து:

இருந்தாலும், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் வைரமுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது, சமீபத்தில் நடந்த படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து, சமீப காலமாக இசை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்ற பிரச்சனை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது. இசையும், பாடல் வரிகளும் சேர்ந்தால் தான் நல்ல பாடல் உருவாகும். சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கிறது.

வைரமுத்து குறித்த கண்டனம்:

இசையை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருப்பது தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே வைரமுத்து, இசைஞானி இளையராஜாவை தான் மறைமுகமாக விமர்சித்து பேசி இருக்கிறார் என்று விவாதங்கள் எழுப்பி இருந்தார்கள். இது குறித்து கங்கை அமரன், எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போல பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி போல அவருடைய பாடலுக்கு அதிகமாக புகழ் வந்ததால் கர்வம் தலைக்கேறி விட்டது.

-விளம்பரம்-

விஜய் ஆண்டனி பேட்டி:

அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார் என்று ஆவேசமாக பேசியிருந்தார். இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பட விழாவில் விஜய் ஆண்டனி கூறியிருப்பது, கணவன்- மனைவி போல விழியில் விழுந்து பாடலில் இசையும் வரியும் ஒன்றை ஒன்று கட்டியணைத்து கொண்டிருக்கும். கணவன் மனைவி உறவு தான் முக்கியம். அதே போல் பாடலை உருவாக்கிய இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் நன்றாகவே தெரியும்.

விஜய் ஆண்டனி நடித்த படம்:

அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், நிறைய நபர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் மேகா ஆகாஷ், தனஞ்ஜெயா, பிரித்திவி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

Advertisement