இன்று நடக்கும் விஜய் அவார்ட்ஸ் சிறப்பு விருந்தினர்கள் , தொகுப்பாளர்கள் யார் தெரியுமா ?

0
886
Vijay-awards-2018

விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி “விஜய் அவார்ட்ஸ்”. பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியான இதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொள்வார்கள்.

Vijay-Awards 2018

கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சில பல காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 10 வது சீசன் தொடங்க இருந்தது. ஆனால் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டதால் இந்த நிகிழ்ச்சி கொஞ்ச நாட்கள் தள்ளி வைக்கபட்டது.

இந்நிலையில் இன்று(ஜூன் 3) விஜய் அவார்ட்ஸின் 10 ஆம் பாகம் மிக கோலாகலமாக துவங்க இருக்கிறது. இதில் பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் முதல் பல்வேறு முன்னணி நடிகர் நடிகைகள் பங்கு பெருக்கின்ரனர்.இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர்களான கோபிநாத், டி டி, மா கா பா ஆகியோர் தொகுத்து வழங்க இருக்கின்றனர்.

dd gopintha makapa

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில்…

*நடிகர் கமலஹாசன்
*நடிகர் விஜய்
*இயக்குனர் அட்லீ
*இசையமைப்பாளர் ஏ.*ஆர். ரகுமான்
*நடிகை காஜல் அகர்வால்

Ulaganayagan-Kamal-Haasan Vijay-Atlee

ஆகியோர் பங்கு பங்குபெறுகின்றனர். மேலும் கடந்த 9 வது விஜய் அவார்ட்ஸில் பங்குபெற்ற இந்தி நடிகர் ஷாருகான் போன்றே இந்த நிகழ்ச்சியிளும் யாராவது ஓரு சர் ப்ரைஸ் விருந்தினர் பங்கு பெறுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.