விஜய்க்கு முதுகில் பிரச்சனை இருக்குனு 13 வருஷம் கழிச்சுத்தான் தெரியும்..!அப்படி இருந்தும் அவர் இதுல ரிஸ்க் எடுத்தார்..!

0
236
Vijay

சண்டை இயக்குனரான கனல் கண்ணன் தமிழ் சினிமாவில் உள்ள அணைத்து கதாநாயகர்களையும் பல்டி அடிக்க வைத்தவர். அதே போல நடிகர் விஜய்யின் பல்வேறு படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றியவர்.

kanal

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கனல் கண்ணன் விஜய் குறித்து பேசுகையில், துள்ளாத மனமும் படத்தில் நான் தான் சண்டை இயக்குனராக பணி புரிந்தேன். அந்த படத்தில் படு மாசான ஆக்ஷன் காட்சிகளை வைக்கலாம் என்று விஜய்யிடம் கூறினேன்.

ஆனால், அவரோ குனிவது, நிமிர்வது போன்ற காட்சிகள் எல்லாம் வேண்டாம் என்று சொன்னார். இருப்பினும் சண்டை காட்சியில் அவரையே மறந்து ரிஸ்க்கான காட்சியில் நடித்தார். உண்மையில் அந்த சமயத்தில் அவருக்கு முதுகுதண்டில் பிரச்சனை இருந்தது. அந்த விடயம் எனக்கு ஒரு 10, 13 வருஷம் கழிச்சி தான் தெரியவந்தது என்று கூறியுள்ளார்.