விஜய் முதல் இடம்.! அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய் சேதுபதி.! எதில் தெரியுமா.!

0
907
Vijay-Ajith-Vijay-Sethupathi

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் தலைமுறையை தாண்டி தற்போது முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவருக்குமே சரிசமமான கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர்கள் சினிமாவை தாண்டி சமூக ஊடகத்திலும் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

பெரும்பாலும் நடிகர்களின் பெயர்களை பயன்படுத்தி ஹேஷ்டாக்குகளை சமூகவலைதளத்தில் ரெண்டிங் ஆக்குவது தான் ரசிகர்களின் வழக்கம். ஆனால், அவை ஒரு நடிகரின் படங்கள் வந்தாலோ இல்லை பிறந்தநாள் வந்தாலோ தான் நடக்க சாத்தியமாகலாம்.

- Advertisement -

அந்த வகையில் சமூக வலைதளத்தில் கிங் என்றால் விஜய் மற்றும் அஜித் தான். ஆனால், விக்கிபீடியா எனப்படும் கூகுள் தகவல் வலைதளத்தில் தமிழ் நடிகர்களில் விஜய் தான் நம்பர் ஒன்னாக திகழ்ந்து வருகிறார் என்று சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிபீடியா என்ற இணையதள பக்கத்தில் பல்வேறு பிரபலங்களின் முழுத்தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதில் தமிழ் நடிகர்களில் விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தை தான் அதிகம் பேர்தேடியுள்ளனர். விஜய்க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ரஜினியும், மூன்றாவது இடத்தில் விஜய் சேதுபதி உள்ளார், அதற்கு அடுத்த இடத்தில் தான் கமல், அஜித் இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement