பிகில் படம் வெற்றியா ? தோல்வியா ? பாலாஜி ஹாசனின், ஐயா ஜோஸ்ஸ்ஸ்சியம்…

0
5347
balaji-hassan-bigil
- Advertisement -

தமிழகத்தையே கலக்கி கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வர இருக்கும் 63 வது படமான பிகில் படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளுக்கு வரப்போகிறது. இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பிகில் படம் தான் செம்மா ட்ரீட்டாகவும், அதிரடி சரவெடி போலவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லியம், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படம் தயாரித்து உள்ளார்கள். ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ வைத்து எடுக்கப்பட்ட படமாகும். விஜய்யின் ‘பிகில்’ படம் ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும், ஆவலையும் தூண்டியுள்ளது. பிகில் படத்தின் ட்ரைலர் வந்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது.

-விளம்பரம்-
Image result for Bigil vijay

பிகில் படம் குறித்து பல விவாதங்களும், சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் பரவிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் தளபதி விஜய்யின் பிகில் படம் அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்ற தகவலும் தெரியவந்துள்ளது. மேலும், 180 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது பிகில் படம். அது மட்டும் இல்லைங்க தமிழ் சினிமாவிலேயே இயக்குனர் ஷங்கர் இயக்கிய , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன் 2.0 படத்திற்கு அடுத்ததாக நம்ம தளபதியின் பிகில் படம் தான் அதிக பட்ஜெட் படமாகும். இந்த படம் பிரம்மாண்ட செலவில், தெறிக்கவிடும் அளவில் இருக்குமெனவும், பாகுபலியை மிஞ்சும் பிகில் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் பிகில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிகில் படம் வெற்றி அடையுமா? இல்லையா? என படக்குழுவினரும், ரசிகர்களும் குழப்பத்தில் இருக்கும்போது உலக அளவில் பிரபலமான ஜோதிடர் பாலாஜி ஹாசன் பிகில்படம் குறித்து இணையங்களில் பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியது, இந்த வருடம் விஜய் நடிப்பில் வரும் பிகில் திரைப்படம் ‘பிளாக்பஸ்டர்’ படமாக வெற்றியடையும். மேலும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பும் என்று கூறியிருந்தார். இது மட்டும் இல்லைங்க ஜோதிடர் பாலாஜி ஹாசன் சொன்னது எப்பவுமே நடக்கும் என்ற நமிக்கையை மக்கள் மனதில் ஆணித்தரமாக உருவாக்கியவர். அது என்னனா, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி இறுதி சுற்றுக்கு நுழையும் என்றும், இறுதியில் நியூசிலாந்து அணி தான் வெற்றியடையும் என்றும் அவர் சரியாக கணித்து கூறி விஷயம் நிஜத்திலும் நடந்தது.

Image result for Balaji hassan
Image result for Bigil vijay

இதனால் பல பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இவரிடம் நேரில் அணுகி பேசி வருகிறார்கள். இந்நிலையில் பிகில் படம் குறித்து ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறிய விஷயம் விஜய் ரசிகர்களுக்கு பயங்கர குஷி ஏற்படுத்தியது கூட சொல்லலாம். மேலும், அவர் சொன்ன மாறியே பிகில் படம் மாஸ் காட்டும் என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள். பிகில் படம் வருவதற்கு முன்னரே படத்தின் ரிசல்ட் எல்லாருக்குமே தெரிஞ்சிருச்சு. அப்புறம் என்னங்க தீபாவளிக்கு சரவெடி போல பிகில் படத்தை கொண்டாட வேண்டியது தானே பாக்கி.

-விளம்பரம்-
Advertisement