விஜய்க்கு விக்ராந்த் மட்டும் தம்பி கிடையாது, மற்றொரு தம்பியும் இருக்கிறார் – அட, இந்த இயக்குனரா.

0
964
vijay
- Advertisement -

விஜய்க்கு விக்ராந்த் மட்டும் இல்லாமல் இன்னொரு தம்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது.

தளபதி 67 படம்:

இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. தமிழில் வாரிசு படத்தின் போட்டியாக அஜித்தின் துணிவு படம் வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய் தம்பிகள்:

இந்நிலையில் விஜய்க்கு விக்ராந்த் மட்டும் இல்லாமல் இன்னொரு தம்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நடிகர் விக்ராந்த் விஜய்க்கு தம்பி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. விக்ராந்தும் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் விஜயின் சித்தி மகன் ஆவார்.

விஜய்யின் இன்னொரு தம்பி புகைப்படம்:

இந்த நிலையில் நடிகர் விக்ராந்த் மட்டுமே விஜய்க்கு தம்பி கிடையாது. இவருக்கு இன்னொரு ஒரு தம்பியும் இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை, விக்ராந்தின் சகோதரர் சஞ்சீவ் தான். இவரும் விஜய்க்கு தம்பி ஆவார். மேலும், விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை சஞ்சீவ் தான் இயக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தற்போது விஜயின் இன்னொரு தம்பியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement