விஜயின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.! விஜய் எங்கு இருக்கிறார் என்று தெரிகிறதா.!

By Rajkumar · 20/4/2019

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவின் ஒரு மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. விஜய் தற்போது தனது 63 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் ,இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும் மற்றும் யோகி பாபு விவேக் டேனியல் போன்ற பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகளா இது.! அச்சு அசலா அவங்க போலவே இருக்காங்க.!

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால் விஜய் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் விஜய் தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று படு வைரலாக பரவியது. இந்த நிலையில் விஜய்யின் பள்ளிப்பரு குரூப் போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full