`என் மீது என்ன தவறு?’ தீர்ப்போடு சேர்த்து அறிவுரை – அதிருப்தியில் விஜய் எடுத்துள்ள அடுத்த அதிரடி முடிவு.

0
41349
vijay

சமீபத்தில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்தவில்லை நடிகர் விஜய்யை பலரும் கேலி செய்து வருகின்றனர். விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கி இருந்தார். மேலும், தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் . இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ’சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது என்று கடுமையாக கூறி இருந்தனர்.

Did Thalapathy Vijay evade tax? - No say fans and provide proof - Tamil  News - IndiaGlitz.com

இதுமட்டுமல்லாம் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விஜய்யை பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால், உண்மையில் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விஜய் வரி கட்டிவிட்டார். ஆனால், நுழைவு வரிக்கு தான் விலக்கு கேட்டு இருந்தார் விஜய். சரி, விஜய் மட்டும் தான் இப்படி செய்துள்ளாரா என்றால் இல்லை.

- Advertisement -

சொகுசு காரை வெளி மாநிலங்கிளில் வாங்கி இருந்தால் கூட இந்த நுழைவு வரியை செலுத்த வேண்டும். அதாவது டெல்லியில் வாங்கிய காராக இருந்தாலும் தமிழ்நாட்டில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யவேண்டுமானால் நுழைவு வரி கட்ட வேண்டும். ஆனால், இறக்குமதி வரி கட்டி வாங்கும் கார்களுக்கு இந்த நுழைவு வரி பொருந்தாது என்பது சொகுசு கார் வாடிக்கையாளர்களின் வாதம். மற்றவர்களை போல தான் விஜய்யும் நுழைவு வரிக்கு விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கிறார் விஜய். இதுகுறித்து இந்த வழக்கில் விஜய் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் எஸ்.குமரேசன் அளித்துள்ள விளக்கத்தில்

வழக்கு விசாரணைக்கு வந்த அன்று (8.7.2021) உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் நுழைவு வரி செலுத்திவிடுகிறோம். எங்களது வழக்கை முடித்து வையுங்கள்’ என்று தான் நாங்கள் வாதிட்டோம். ஆனால், நீதிபதியோ, இப்படி ஒரு வழக்கு தொடர்ந்ததே தவறு என்ற ரீதியில் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். வரி கட்டக் கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை. வரி விதிப்பிலிருந்து யாரும் விலகி ஓடவோ, வெளியேறவோ முடியாது. அது விஜய் சாருக்கும் நன்றாகத் தெரியும்.

-விளம்பரம்-

ஆனால், இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அபராதமும் விதித்திருக்கிறார். தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை மட்டுமே எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கிறோம். இது தனி நீதிபதியின் தீர்ப்பு என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் எங்கள் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யப்போகிறோம். இவ்வளவு காரசாரமான மன வருத்தமளிக்கும் கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது என்பதுதான் எங்களது வாதம். அதை சட்டப்படியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

Advertisement