தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகாவின் காதல் கிசுகிசுகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா அவர்கள் ஐந்து வருடத்திற்கும் மேலாக தன்னுடன் நடித்த நடிகர் விஜய் தேவர் கொண்டாவை தான் காதலிக்கிறார்.

இருவரும் டேட்டிங் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. அதற்கு ஏற்ப இருவருமே பல இடங்களில் ஒன்றாக சென்ற புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதோடு சில மேடைகளில் கூட விஜய் தேவர் கொண்டாவை காதலிப்பதாக மறைமுகமாக ராஷ்மிகா உறுதி செய்திருந்தார். இதை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் ராஷ்மிகா-விஜய் தேவர்கொண்டா உடைய நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது.
ராஷ்மிகா காதல் கிசுகிசு:
இருந்தாலும் இது குறித்து இருவருமே எந்த ஒரு தகவலுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். இதை அடுத்து ராஷ்மிகா - விஜய் தேவர்கொண்டா திருமணம் பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தானில் தான் நடைபெறுகிறது. இதில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் இருவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

ராஷ்மிகா - விஜய் தேவர்கொண்டா திருமணம்:
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவுமே வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் ராஷ்மிகா- விஜய் தேவர் கொண்ட இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டு இருக்கிறார்கள். அதில், நாங்கள் எந்த பிளான் செய்வதற்கு முன்பும் நாங்கள் எங்களுக்காக எதை தேர்ந்தெடுப்பதற்கும் முன்பும் நீங்கள் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள். அதுதான் அன்புடன் நீங்கள் எங்களுக்கு 'VIROSH' என்ற பெயரை தந்திருக்கிறீர்கள்.

ராஷ்மிகா - விஜய் தேவர்கொண்டா பதிவு:
எங்களை நீங்கள் அப்படி அழைத்தீர்கள். அதனால் இன்று நிறைந்த மனதுடன் உங்கள் முன்னிலையில் நாங்கள் இணைகிறோம். அதற்கு 'The Wedding of VIROSH' என்று பெயரிட்டு இருக்கிறோம். உங்களுடைய அதீத அன்பால் எங்களை பற்றியதற்கு நன்றி. உங்களுடைய அன்பிற்கு நன்றி. எப்போதும் நீங்கள் எங்களுடைய பாதி என்று கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் இருவருமே திருமணம் செய்வது உறுதியாகி இருக்கிறது.






