வைரலான தல தளபதி புகைப்படம் – காண்டில் தல ரசிகர்கள் ட்ரெண்ட் செய்த ஹேஷ் டேக்கை பாருங்க (இதுவும் நியாயம் தான)

0
1461
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்றால் அது அஜித் குமார் தான் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ரஜினி கமல் தலைமுறையை தொடர்ந்து தற்போது விஜய் அஜித் தான் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகிறார்கள். மற்ற நடிகர்களுக்கு வட்டம் இருப்பது போன்று அஜித்துக்கும் தல என்ற பட்டம் இருக்கிறது. ஆனால்,இந்த பட்டத்தை வேறு யாராவது குறிப்பிட்டால் அஜித் ரசிகர்கள் உடனே பொங்கி எழுந்து விடுவார்கள்.

-விளம்பரம்-
Image

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் விஜய் மற்றும் தோனி சந்தித்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து காண்டாகிய அஜித் ரசிகர்கள் ஒரு ஹேஷ் டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வர வைத்து இருக்கின்றனர். இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் பாருங்க : பீச்சில் வெள்ளை உடையில் ஆட்டம் அப்பட்டமாக தெரிந்த சிகப்பு உள்ளாடை – அஜித் பட நடிகையின் கட்டுக்கடங்காத கிளாமர்.

- Advertisement -

மீதமுள்ள 31 போட்டிகளில் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் விரைவில் இந்த தொடர் நடைபெற இருக்கிறது. துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் போட்டியில் விளையாடும் என்று அறிவித்திருந்தது. இப்படி ஒரு நிலையில் Csk அணி வீரர்கள் பலரும் சென்னை வர துவங்கினர்.

அந்த வகையில் சென்னை அணியில் முதல் நபராக தோனி கடந்த சில நாட்களுக்கு முன் தனது குடும்பத்துடன் சென்னை வந்து தரை இறங்கியுள்ளார். இப்படி ஒரு நிலையில் தோனி விஜய்யை பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து அவருடன் கேரவனில் சிறிது நேரம் உரையாடி இருக்கிறார் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இந்த புகைப்படங்களை பலரும் பகிர்ந்து தல – தளபதி என்று குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் கொஞம் காண்டான அஜித் ரசிகர்கள், ட்விட்டரில் #ஒரேதலஅஜித் என்ற ஹேஷ் டேக்கை போட்டு தள்ளி வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. என்னதான் தோனியை தல என்று அழைத்தாலும் தமிழ் நாட்டிற்கு தல என்றால் அஜித் தானே

Advertisement