இலவச மிக்சி கிரைண்டர் போய்..!விஜய் ரசிகர் அடுத்து என்ன உடைத்தனர் என்று பாருங்கள்..!வீடியோ இதோ..!

0
485
Vijayfan
- Advertisement -

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார் சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் சில காட்சிகள் ஆளும் அதிமுக அரசை விமர்சிப்பது போல் உள்ளதாக புகார்கள் எழுந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டு சர்கார் திரைப்படத்தின் பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுக்கவே படத்தின் சில காட்சிகள் நீக்கபட்டது.

- Advertisement -

அரசின் இந்தப்போக்கினை கண்டு கொதிப்படைந்த சில விஜய் ரசிகர்கள் #OruViralPurtchi என்ற ஹேஸ் டேக்-ஐ பயன்படுத்தி தங்களின் வீடுகளில் உள்ள அரசின் விலையில்லா பொருட்களான லேப் டாப்கள், மிக்சிக்கள் போன்றவற்றை தீயிட்டு எரித்தும், உடைத்தும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். ஆனால், ரசிகர் ஒருவர் ஒருபடி மேலே சென்று அரசு அளித்த இலவச வீட்டையே இடித்துக்கொண்டிருக்கிறார்.

Advertisement