ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சென்னை அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலியிடம் கடந்த ஆண்டு அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட விடயம் இணையத்தில் மிகவும் வைரலானது. மேலும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டதனால் அந்த விடயம் அப்போது இணையத்தில் பேசப்படும் பெரிய பொருளாக மாறியது.

அதனை தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்கள் போன்றே விஜய் ரசிகர்கள் சிலரும் பெங்களூருவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் போது செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி மார்ச் 12ஆம் தேதி நேற்று இலங்கை அணிக்கு எதிராக பெங்களூர் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டி இன்று இரண்டாம் நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்கள் குவிக்க இலங்கை அணி தங்களது முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே குவித்து 143 ரன்கள் பின்தங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தங்களது 2-வது இன்னிங்சை விளையாடி வரும் வேளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்கள் குவிக்க இலங்கை அணி தங்களது முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே குவித்து 143 ரன்கள் பின்தங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தங்களது 2-வது இன்னிங்சை விளையாடி வரும் வேளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Advertisement

பெங்களூர் மைதானத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் முகமது ஷமி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது அவரிடம் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்டது தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியாக இருக்கும் புதிய படமான பீஸ்ட் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்த பீஸ்ட் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் முகமது ஷமியிடம் கேட்டனர். முகமது ஷமிக்கு எதுவும் புரியாததால் அவரும் மொயின் அலியை போன்றே பதில் எதுவும் சொல்லாமல் பீல்டிங் செய்ய சென்றுவிட்டார். ஏற்கனவே வலிமை படம் வெளியாவதற்கு முன்னர் பல கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்கள் அப்டேட் கேட்டு இருந்தனர். இதனால் அஜித், அறிக்கை ஒன்றை கூட வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement