தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.

இதையும் பாருங்க : Vijay Television Awardல் பிரியங்காவிற்கு கிடைத்த விருது, கடுப்பான நெட்டிசன்கள் (இதுவும் நியாயம் தான்)

Advertisement

ட்ரைலரை திரையிட்ட திரையரங்குகள் :

மேலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இருந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. அதோடு தளபதி விஜயின் பீஸ்ட் படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் படத்தின் டிரைலரை பல திரையரங்குகளில் ரசிகர்கள் இலவாசமாக கண்டுகழிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தியேட்டரை நாசம் செய்த ரசிகர்கள் :

அந்த வகையில் நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் டிரெய்லர் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்து இருந்தார்கள். அப்போது ஆர்வத்தில் ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடி, நாற்காலிகள் எல்லாம் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். நுழைவு வாயில் இருந்த ரசிகர்கள் முந்தியடித்து கொண்டு உள்ளே சென்றது போது கண்ணாடி உடைந்து இருக்கிறது. டிரெய்லரை பார்த்த உற்சாகத்தில் இருக்கைகள் மீது ஏறி ஆடி விசிலடித்து நாற்காலிகள் எல்லாம் உடைத்து நாசமாகி இருக்கிறார்கள்.

Advertisement

ரசிகர்களை தாக்கிய ஊழியர்கள் :

இதுகுறித்து திரையரங்க நிர்வாகம் தெரிவிக்கையில் ரசிகர்கள் வேண்டுமென்று இதை செய்யவில்லை தள்ளு முல்லால் ஏற்பட்ட சேதம் தான் இது என்று கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் திரையரங்கு வாசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் திரையரங்கின் கண்ணாடி உடையும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் கண்ணாடியை உடைத்த ரசிகர்களை திரையரங்க ஊழியர்கள் தாக்கி இருக்கின்றனர்.

Advertisement

திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை:

ஏற்கனவே, இந்த விவகாரம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ஆடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், இலவசமாக டிரைலர் வெளியிடும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும். இதனால் பிரச்சனைகள் ஏற்படும்போது திரையரங்கு உரிமத்தை இழக்கக் கூடிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement