விஜய் ரசிகரின் மூக்கு வாயை உடைத்த தியேட்டர் ஊழியர்கள் – என்ன காரணம் தெரியுமா ? வைரலாகும் வீடியோ.

0
299
Vijay
- Advertisement -

திரையரங்கில் பிரச்சனை செய்த விஜய் ரசிகர்களை திரையரங்க ஊழியர்கள் தாக்கி இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி இருக்கிறது. இந்த படத்தை பார்த்த பலரும் நெகடிவ் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சிதம்பரத்தில் இருக்கும் ஒரு திரையரங்கில் லிஸ்ட் திரைப்படத்தை பார்க்க வந்த விஜய் ரசிகர்களை திரையரங்க ஊழியன் ரத்தம் வருமளவிற்கு தாக்கி இருக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

சிதம்பரத்தில் இருக்கும் திரையரங்கு ஒன்றில் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக சிலர் குடித்துவிட்டு வந்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மது போதையில் இருந்ததால் அவர்களை அரங்கிற்குள் அனுமதிக்க முடியாது என்று திரையரங்கு ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், மது போதையில் இருந்த அந்த ரசிகர்கள் திரையரங்க ஊழியர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திரையரங்கு ஊழியர்கள் அந்த ரசிகர்களை மூக்கை உடைத்து இரத்தம் வரும் அளவிற்கு அடித்து வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.

- Advertisement -

விஜய் ரசிகர்கள் தாக்குதல் :

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை சமாதானம் செய்து விசாரித்து அனுப்பியிருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் இப்படி அடிவாங்குவது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே பல இடங்களில் பல பிரச்சனைகளை செய்து அடிவாங்கி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பீஸ்ட் படத்தின் முன்பதிவு துவங்கிய சமையத்தில், கடலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள நியூ சினிமா திரையரங்கில், பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சி மறுக்கப்பட்டது.

சாலை மாறியலால் அடி :

ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதையும் மீறி ரசிகர்கள் சாலையை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு செய்தததால், அவர்களின் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதே போல பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியான போது அந்த படத்தின் டிரைலரை பல திரையரங்குகளில் ரசிகர்கள் இலவாசமாக கண்டுகழிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

திரையரங்கை சேதபடுத்திய ரசிகர்கள் :

அந்த வகையில் நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் டிரெய்லர் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்து இருந்தார்கள். அப்போது ஆர்வத்தில் ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடி, நாற்காலிகள் எல்லாம் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். நுழைவு வாயில் இருந்த ரசிகர்கள் முந்தியடித்து கொண்டு உள்ளே சென்றது போது கண்ணாடி உடைந்து இருக்கிறது. டிரெய்லரை பார்த்த உற்சாகத்தில் இருக்கைகள் மீது ஏறி ஆடி விசிலடித்து நாற்காலிகள் எல்லாம் உடைத்து நாசமாகி இருக்கிறார்கள்.

திரையரங்க நிர்வாகம் விளக்கம் :

இதுகுறித்து திரையரங்க நிர்வாகம் தெரிவிக்கையில் ரசிகர்கள் வேண்டுமென்று இதை செய்யவில்லை தள்ளு முல்லால் ஏற்பட்ட சேதம் தான் இது என்று கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் திரையரங்கு வாசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் திரையரங்கின் கண்ணாடி உடையும் வீடியோ ஒன்று வெளியாகிஇருந்தது . அந்த வீடியோவில் கண்ணாடியை உடைத்த ரசிகர்களை திரையரங்க ஊழியர்கள் தாக்கிஇருந்தார்கள.

Advertisement