ரஜினி கமல் விஜய் போன்றவர்களின் அரசியல் வருகை குறித்து கடுமையாக விமர்சித்த சீமான், தற்போது விஜயை சூர்யாவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தமிழக அரசியலை பொறுத்த வரை பல்வேறு நடிகர் நடிகைகள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளனர். அதில் எம் ஜி ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பல சினிமா பிரபலங்கள் தமிழகத்தை ஆண்டும் உள்ளார்கள். இவர்களை தொடர்ந்து விஜயகாந்த், சரத்குமார், சீமான், குஷ்பூ, ரோஜா என்று பல்வேறு நடிகர் நடிகைகள் அரசியலில் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கின்றனர். அதிலும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் ரஜினி, கமல் கூட அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் களம்காண இருக்கின்றனர்.

அதே போல நடிகர் விஜய் கூட விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆணித்தனமாக நம்பிக்கை வைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இப்படி ஒரு நிலையில் ரஜினி, கமல், விஜய் போன்றவர்களின் அரசியல் வருகை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சீமான், எங்களை வழி நடத்துவதற்கு எங்களுக்குள் ஒருவர் இல்லையா? இதற்கு மகாராஷ்டிராவில் இருந்து ஒருவர் வரவேண்டுமா? மானம், வீரம், அறம் ஆகிய மூன்றும் உயிர் என்று வாழ்ந்த தமிழினத்துக்கு இது ஒரு தன்மான இழப்பு. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை விட்டுவிட்டு ரஜினிகாந்தை மட்டும் பிடிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.

இதையும் பாருங்க : வைரலாகும் அர்ஜுனின் நிச்சயதார்த்த புகைப்படம் – அர்ஜுன் மடியில் இருப்பது யார் தெரியுமா ? பலரையும் சோகத்தில் ஆழ்த்தியவர்.

Advertisement

அவர்களையெல்லாம் விட்டு விட்டதால்தான் இப்போது இவர்களை பிடிக்க வேண்டியதாக இருக்கிறது.பிரபாகரனை பற்றி, ரஜினியும், கமல்ஹாசனும் மதிப்பீடு சொல்லிவிடுங்கள் பார்ப்போம். என்னுடைய தாய்மொழி தமிழ், உங்களுடைய தாய் மொழி என்ன என்று முதலில் சொல்லுங்கள். அவ்வளவு மானங்கெட்ட கூட்டமா நாங்கள்?ரஜினிகாந்த், கமல்ஹாசனை அடிக்கிற அடியில் வேறு எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது என்றார். இது விஜய்க்கும் பொருந்துமா என்ற நிருபரின் கேள்விக்கு, எல்லோருக்கும் பொருந்தும். நானும் திரையுலகத்தில் இருந்து வந்துள்ளேன். ஆனால் நான் ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வரவில்லை.

சாவுகூட்டத்தில் வெடித்துக் கிளம்பி மக்களை சந்தித்து நான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று கூறி இருந்தார் சீமான்.சீமானின் இந்த பேச்சக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தேனி மாவட்ட இளைஞர் அணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தேனி என்ஆர்டி நகர் பகுதியில் சீமானை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ‘அரசியலின் நடிகன் சீமானே எங்கள் தளபதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இதையும் பாருங்க : திரும்ப வருவோம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவுடன் சித்ரா சொன்ன கிறிஸ்துமஸ் வாழ்த்து – ரசிகர்களை உருக்கிய வீடியோ.

Advertisement

இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர்கள் தன்னை விமர்சிப்பது குறித்து சீமான் பேசுகையில் விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது குறைந்தது சூர்யா அளவிற்காவது விடை குரல் கொடுக்கட்டும் மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும் என்று கூறியிருக்கிறார் சீமானின் இந்த கருத்தையும் சமூகவலைதளத்தில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement