விஜய்க்காக சிம்பு பாடிய பாடல் – memes போட்டு அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றும் விஜய் ரசிகர்கள்.

0
882
simbu
- Advertisement -

அஜித்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை நெல்சன் இயக்கி இருந்தார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. இதனை அடுத்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வாரிசு படத்தின் பாடல்:

அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி பாடல் வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

தீ தளபதி பாடல்:

இந்த பாடலை விஜய் திரைத்துறையில் நுழைந்து முப்பது வருடங்கள் நிறைவானதை ஒட்டி படக்குழு சமர்ப்பித்திருந்தது. மேலும், இந்த பாடலை சிம்பு பாடி இருக்கிறார். முதன் முறையாக விஜய்க்கு சிம்பு குரல் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அஜித்தை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அஜித்தை கேலி செய்யும் ரசிகர்கள்:

அதாவது, சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி இருக்கும் நிலையில் விஜய்க்காக சிம்பு பாடி இருப்பதை பார்த்து அஜித் ரசிகர்கள், முதுகிலேயே குத்தி விட்டுட்டான், துரோகி என்றெல்லாம் புலம்புவதாக விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது அஜித்தை ட்ரோல் செய்து வரும் மீம்ஸ் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement