சொகுசு கார் வரி வழக்கில் நடிகர் விஜய் தனது காருக்கான வரியை செலுத்தி இருக்கிறார். விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கி இருந்தார். மேலும், தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் . இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ’சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு.

நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது என்று கடுமையாக கூறி இருந்தனர்.இதுமட்டுமல்லாம் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விஜய்யை பலரும் விமர்சித்து வந்தனர்.

இதையும் பாருங்க : தன்னுடைய பிறந்தநாளில் பிகினி உடையில் தரிசனம் கொடுத்துள்ள ஹன்சிகா – ரசிகர்கள் குஷி.

Advertisement

பின்னர் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டுக்கு சென்றது விஜய் தரப்பு, இந்த வழக்கு வருமான வரி தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் நுழைவு வரி பாக்கி 80 சதவீதத்தை 1 வாரத்தில் விஜய் செலுத்த வேண்டும் என்று கூறினர்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையின் போது ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். அப்போது அபராதமாக விதிக்கப்படும் ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை ஏற்கனவே முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் கொடுத்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் தன் காருக்கு, மொத்தம், 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளார். முதலில், 8 லட்சம் ரூபாயும், தற்போது 32 லட்சம் ரூபாயும் செலுத்தி இருக்கிறார். :இறக்குமதி காரை பதிவு செய்ய, நுழைவு வரி செலுத்தியதற்கான ரசீதும், ஆட்சேபனை இல்லா சான்றிதழும் அவசியம். இது, அனைத்து இறக்குமதி கார்களுக்கும் பொருந்தும். ஜி.எஸ்.டி., சட்டத்திற்கு முன், மதிப்பு கூட்டு வரி அமலில் இருந்தது. அப்போது, இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது அவசியம் என்பதால் விஜய் தற்போது முழு நுழைவு வரியை செலுத்தி உள்ளார்.

Advertisement
Advertisement