பஸ் வசதி கூட இல்லாத ஊருக்கு நேரில் சென்று விஜய் செய்த விஷயம் – தமிழகத்தில் முதன் முறையாக விஜய் சிலை வைத்த ஊர். வைரலாகும் வீடியோ.

0
249
vijay
- Advertisement -

நடிகர் விஜய்யை பற்றி அவரின் ரசிகர் ஒருவர் சொல்லியிருக்கும் தகவலானது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கி நடிகர் விஜய் நடித்து பிரம்மாண்டமாக உரியுவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சங்கீதா, சரத்குமார், சாம், பிரகாஷ் ராஜ், பிரபு, யோகிபாபு, ஜெயா சுதா, ஸ்ரீகாந்த் மீகா போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் சிங்களானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை பெற்றிருந்தது.வாரிசு படம் ஏறக்குறைய முடிந்த நிலையில் இப்படமானது வரும் பொங்கலன்று வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் ரெட் செயின்ட் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வாரிசும் ஒரே நேரத்தில் வெளியாவதினால் “வாரிசு” படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கும் நிலையில் ஏற்பட்டது.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆந்திராவில் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தை வெளியிடக்கூடாது எதிர்ப்புகள் எழுந்தது.அதாவது ஆந்திர மாநில தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முதிலில் தெலுங்கு மொழியில் உருவாகும் திரைப்படங்களை மட்டுமே பண்டிகை காலங்களில் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இதனால் ஆந்திராவில் தெலுங்கு டப்பிங்கில் வெளியாகும் “வாரிசு” திரைப்படத்தை வரும் பொங்கலன்று வெளியிடக்கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் பல பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று லிங்குசாமி, பேரரசு போன்ற தயாரிப்பாளர்கள் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தை எத்சரித்திருந்தனர்.தமிழ் நாட்டில் குறைவான திரையங்குகள், ஆந்திராவில் தடை என இருக்கும் நிலையில் நடிகர் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை பனையூரில் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பில் பேசிய விஜய் “வாரிசு” படம் வெளியாகும் போது எப்படி ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து வரும் நிதியை எப்படி ஏழை எளியவர்களுக்கு அதன் மூலம் உதவி செய்ய வேண்டும் என்று பல அறிவுரைகளை கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்பு முடிந்தவுடன் விஜய் ராசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்திக்கொண்டார்.இந்நிலையில் அங்கு வந்திருந்த விஜய் ரசிகர்களில் ஒருவர் பேசியபோது எங்களுடய ஊர் சிறியதுதான் பாஸ் வசதி, தெரு வசதி என்று ஒன்றும் கிடையாது ஆனால் விஜய் எங்கள் ஊருக்கு வந்து சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார்.

மேலும் அன்னதானத்தையும் செய்திருக்கிறார். எங்களில் ஊருக்கு பெருமாள் கோவில் ஒன்றயும் கட்டித் தந்துள்ளார், தளபதி விஜய்க்கு முதல் முதலில் சிலை மற்றும் கல்வெட்டு எங்களில் ஊரில்தான் வைத்தோம் என்று அந்த ரசிகர் கூறினார். மேலும் நங்கள் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களாக இருப்பதினால் எங்கள் ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் நடிக்கும் திரைப்படங்களில் பெயரை தான் வைப்போம் என்று நெகிழ்ந்து அந்த ரசிகர் கூறியிருந்தார்.

Advertisement