இதே நண்பர்களுடன் கல்லூரி படிக்கும் போது விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம். நண்பர் பகிர்ந்த புகைப்படம்.

0
189855
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜக்கு போட்டியான நடிகர் என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித் தான். என்ன தான் ஒரு சில ரசிகர்கள் தற்போதும் தல தளபதி சண்டையை போட்டுக்கொண்டு வந்தாலும் விஜய் மற்றும் அஜித் இடையே எப்போதும் ஆரோக்யமான உறவு இருக்கிறது என்று பல முறை நிறுப்பித்துள்ளனர்.

-விளம்பரம்-
master

இந்நிலையில் விஜய் மற்ற நடிகர்களை எவ்வாறு பார்ப்பார் என்று நடிகர் சஞ்சீவ் கூறியுள்ளார்.விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்.விஜயுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும், விஜயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில முக்கிய நிகழ்வுகளில் எப்போதும் அவருடன் இருந்தவர். திரைப்படங்களை தாண்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமதி செல்வம் ” தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதையும் பாருங்க : ‘Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்’ மகேஸ்வரி பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகரின் கமன்ட்.

- Advertisement -

விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால்,சஞ்சீவ் எந்த பேட்டியில் பங்குபெற்றாலும் அவரிடம் விஜய் குறித்த கேள்வி கண்டிப்பாக முன்வைக்கப்படும். அதே போல சஞ்சீவ் மற்றும் விஜய் இருவருமே பெரும்பலம் நேரில் சந்தித்துக்கொண்டாள் கூட படங்களை பற்றி அவ்வளவாக பேசுவதும் இல்லை. அவ்வளவு ஏன், நண்பனாக இருந்தாலும் இதுவரை விஜய்யிடம் பட வாய்ப்பு கூட கேட்டதில்லை நடிகர் சஞ்சீவ்.

அந்த அளவிற்கு சினிமாவையும் தனிப்பட்ட நட்ப்பையும் மெயின்டெய்ன் செய்து வருகிறார் சஞ்சீவ். விஜய்யின் திரை துறை நண்பர்களிலேயே சஞ்சீவ்விற்கு தான் விஜய்யை பற்றி அதிகம் தெரியும், காரணம் விஜய் படித்த அதே கல்லூரியில் தான் சஞ்சீவ்வும் படித்தார்.

-விளம்பரம்-
Image result for vijay friends in master

இந்த நிலையில் நடிகர் சஞ்சீவ், கல்லூரி காலத்தில் விஜய்யுடன் எடுத்த குரூப் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அரும்பு மீசையுடன், கோட் ஷூட்டில் அப்போதே செம ஸ்டைலாக இருக்கிறார் விஜய். இந்த புகைப்படத்தில் நடிகர் ஸ்ரீநாத்தும் இருக்கிறார். இவர் விஜய்யின் நாளைய தீர்ப்பு, வேட்டைக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

இதையும் பாருங்க : மணிவண்ணனின் மகனா இது? தற்போது எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் பாருங்க.

இந்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் ஸ்ரீமன் மற்றும் சஞ்சீவ் இருவரும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட வருடங்களுக்கு பின்னர் இவர்கள் இருவரும் விஜய்யின் படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement