விஜய்யை கலாய்த்தது கூட தெரியாமல் கமல் பட காட்சியை லைக் செய்து கமண்ட் செய்த விஜய்யின் நண்பர் ஸ்ரீமன்.

0
604
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் “புதிய மன்னர்கள்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் விஜய் நடித்து கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான லவ டுடே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீமன். இவர் தளபதி விஜய் அவர்கள் சினிமா உலகத்திற்கு வரும் முன்னரே அவருடன் நண்பராக இருந்தவர். நடிகர் ஸ்ரீமன், சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத். மூவரும் விஜய் அவர்களுடன் அந்த காலம் தொட்டு நண்பராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

ஸ்ரீமண் மற்றும் சஞ்சீவ் விஜய்யின் பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். அதே போல ஸ்ரீநாத், விஜய் நடிப்பில் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலும் வேட்டைக்காரன் படத்திலும் ஸ்ரீமன் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீமன் விஜய் நடத்த லவ் டுடே துவங்கி சமீபத்தில் வெளியான “வாரிசு” படம் வரை விஜய்யுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஒரு சக நடிகர் என்பதை விட இவர் விஜய்யின் நண்பர் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு விஜய் பற்றிய பல விஷயங்கள் இவருக்கு தெரியும்.

- Advertisement -

வாரிசு :

இந்த நிலையில் இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கி தில் ராஜு தயாரித்த ” வாரிசு” படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார். இந்த படம் கடந்த பொங்கலன்று வெளியாகி மாபெரும் வசூலை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் ஸ்ரீமன். இப்படிப்பட்ட நிலையில் தான் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆக்டொபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

லியோ படம் :

மேலும் படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது, அதோடு படத்தின் முதல் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் நடிகை திரிஷா பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறார், இவரோடு கௌதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் என பலர் நடிக்க உள்ளனர். அதோடு விக்ரம் படத்தில் நடித்த சிலரும் இடப்பதிலும் நடிக்க இருப்பதினால் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-

மொக்கை வாங்கிய ஸ்ரீமன் :

தற்போது லியோ படக்குழு சென்னையில் படப்பிடிப்பு முடிந்து காஷ்மீரில் படப்பிடிப்பை நிகழ்த்தி வருகிறது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவியிம் வாங்கியுள்ளது. இந்த நிலையில் தான் ஸ்ரீமன் நெட்டிசன் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விடீயோவிற்கு கருத்து தெரிவித்து மொக்கை வாங்கியுள்ளார்.

நெட்டிசன் ட்விட் பதிவு :

அதாவது பாஸ்கி என்ற நெட்டிசன் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் விஜய்யின் நண்பருமாகிய ஸ்ரீமன் நடித்த படத்தின் ஒரு காட்சியை பதிவிட்டு “அந்த உள்முகமான பேச்சு போல… நடிகர் ஸ்ரீமன் செட்டப்ஸ்டாரை சிரமமின்றி பின்பற்றுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

இப்படி விஜய்யை கலாய்த்து பதிவிட்ட வீடியோ என்று கூட தெரியாமல் தன்னை அவர் பாராட்டுவதாக நீணைத்து “எல்லா நேரத்திலும் கற்றுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் நடிகர் ஸ்ரீமன். இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் நடிகர் ஸ்ரீமன் அவர்களை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement