தமிழில் ஒரு சில குணசித்ர நடிகர்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், கமல் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஸ்ரீமன்.ஆந்திர மாநிலம், ராஜ்மந்த்ரியை பூர்விகமாக கொண்ட இவர் , 1975 ஆம் ஆண்டு முதல் திரை துறையில் நடித்து வருகிறார். இதுவரை தமிழில் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணசித்ர கதாபாத்திரத்திலும் நடித்துளளார். அதிலும் குறிப்பாக விக்ரம் நடித்த “சேது” கமல் நடித்த “பஞ்ச தந்திரம்” போன்ற படங்களில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

மேலும், இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்யின் லவ் டுடே, பிரிண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார். குணச்சித்திர நடிகராக மட்டும் அல்லாமல் காமெடி, வில்லன் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்த ஸ்ரீமன், ஒரு படத்தில் தான் கஷ்டப்பட்டு நடித்த காட்சி பலரால் கண்டுகொள்ளாமல் போனது குறித்து வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீமன், ஒரு நல்ல காட்சி தவறான நேரத்தில் வெளியாகி அனைத்து கஷ்டங்களையும் வீணடித்து விட்டது இந்த படத்தை தற்போது அமேசானில் பார்த்துவிட்டு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகின்றனர் ஆனால் இந்த படம் எப்போது வெளியானது என்று கேட்கிறார்கள் யாரோ குறை சொல்வது என்பதற்கு பதில் சொல்ல முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் ‘உள்குத்து ‘ படத்தில் அட்டகத்தி தினேஷ் நந்திதா போன்ற பலர் நடித்திருந்தார்கள் இந்தப் பிரச்சினை கார்த்திக் ராஜூ என்பவர் இயக்கியிருந்தார்.இவர் ஏற்கனவே அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி இருந்த திருடன் போலீஸ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் அறிவிப்பு 2014 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் செப்டம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது

Advertisement
Advertisement