-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ப்ரண்ட்ஸ் படத்தில் வந்த குட்டி விஜயா இது, அவர் ஹீரோவாக நடித்த குறும்படத்தை பார்த்துள்ளீர்களா ?

0
5501
friends

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எத்தனையோ பேர் தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றனர். ஆனால், ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. அந்த வகையில் ஜெயந்தும் ஒருவர். 2002ஆம் ஆண்டு விஜய்-சூரியா நடித்த மெகா ஹிட் படம்தான் ப்ரண்ட்ஸ். இந்த படத்தில் விஜயின் சின்ன வயசு கேரக்டரில் நடித்திருபப்பார் ஒரு சின்ன பையன். இவருடைய உண்மையான பெயர் தெரியுமா? தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா?

-விளம்பரம்-

இவருடைய உண்மையான பெயர் பரத் ஜெயந்த். இவர் 1988ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இந்த படத்தில் நடிக்கும்போது பரத்திற்கு 14வயதாகும். இவர் எம்.சி.டி.எம் சர்வதேசச பள்ளியில் தான் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.அதன்பின்னர் லயோலா கல்லூரியில் விசுவல் கமம்யூனிகேசன் மற்றும் எம்.பி.ஏ முடித்தார். அதன் பின்னர் மாடலிங் துறையில் புகுந்தார். ஒரு செம்ம மாடலாக வலம் வந்தார் பரத்.

இதையும் பாருங்க : யோகா தினத்திற்கு வாழ்த்து சொல்ல, பூனம் பாஜ்வா கொடுத்த படு கிளாமர் போஸ்.

ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த பின் வானத்தைபோல மற்றும் பிரியமான தோழி ஆகிய படங்களில் நடித்தார்.இவர் நடிப்புக்கு சிறிது காலம் முடக்கு போட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த போய்விட்டார்பின்னர் பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் இளமை நாட்கள் என்னும் படத்தில் நடித்தார் பரத் ஜெயந்த். மேலும், இவர் ஒரு குறும்படத்தில் நடித்துளளார்.

-விளம்பரம்-

இது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம், இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு குறும் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் ஆனால் இந்த குறும் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இதோ அந்த வீடியோ.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news