டுபாக்கூர் டயலாக் எல்லாமே சினிமாவில் மட்டும் தானா. தை 1 வரை டைம் – எச்சரிக்கை விடுத்த கீ.வீரலட்சிமி. உதவிய செய்த விஜய்.

0
813
veeralakshmi
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் தமிழ் நாடு முழுவதும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் தமிழர் முன்னேற்ற படை தலைவர் கீ.வீரலட்சிமி வாரிசு படத்திற்கு எதிராக திரையரங்கம் முன்பு உருவ பொம்மையை எரித்து போராட இருப்பதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளன ஒரு இளம் பெண் 60 சதவிகித தீ காயங்களுடன் நடிகர் விஜய் தன்னை வந்து சந்திக்குமாறும், தனக்கு உதவி செய்யுமாறும் விருப்பம் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் தீயாக பரவியது.இந்த நிலையில் நடிகர் விஜய் அந்த பெண்ணை இதுவரையில் சந்திக்காத நிலையில், விஜய்யை கண்டித்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கீ.வீரலட்சிமி பதிவு ஒன்றை வெளியிட்டு விஜய்யை கண்டித்திருகிறார்.

- Advertisement -

சிறுமியின் கோரிக்கை:

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது `நடிகர் விஜய் அவர்களே உங்களிடம் எவ்வளவு விலை உயர்ந்த கார், பங்களா, ஆபரணங்கள், சொத்துக்கள் உள்ளன. இது உங்களுடைய சொத்து கிடையாது சாதரண கூலி வேலை செய்யும் ரசிகரின் பணம். அதே போன்ற ஒரு ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த இளம் பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி உடலில் 60 சதவிகிதம் தீக்காயங்களுடன் உங்ககளிடம் ரசிகையாக ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.

உதவி செய்யவில்லை :

அந்த இளம் பெண் `அண்ணா நான் பாலியல் ரீதியாக தக்குதலுக்கு உள்ளாகி 60 சதவிகிதம் தீக்காயங்களுடன் இருக்கிறேன் என்னை வந்து சந்தீப்பீர்களா? எனக்கு உதவி செய்வீர்களா? என்று கேட்டார். அந்த செய்தி தமிழ் நாட்டில் உள்ள அணைத்து ஊடகங்களிலும் வெளியானது. நாங்களும் கட்சி சார்பில் போஸ்டர் அடித்து கோரிக்கை வைத்தோம். இந்த செய்தி உங்களுக்கு தெரிந்தும், ஒரு நடிகராக உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் மனிதநேயத்துடன் கூட அந்த பெண்ணுக்கு உதவி செய்யவில்லை.

-விளம்பரம்-

டுபாகூர் டயலாக் :

அப்போது உங்களுடைய “டுபாகூர் டயலாக்” அனைத்தும் சினிமா வசனங்களுக்கு தானா?. நீங்கள் சிறிய தீக்குச்சியால் உங்களுடைய கைகளை சுட்டு பாருங்கள், அந்த நொடி முதல் அரை மணி நேரம் வரையில் உங்களால் சிந்திக்க முடியாது. ஆனால் அந்த 17 வயது பெண் சிறுமி உடல் முழுவதும் தீக்காயத்துடன், அந்த ரணத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்தாள். அனால் அந்த சிறுமி வைத்த கோரிக்கையை உங்களால் இதுவரையில் நிறைவேற்ற முடியவில்லை.

உருவ பொம்மை எதிர்ப்பு :

இதனால் உங்களுக்கு தமிழர் முன்னேற்ற படை தை 1 வரையில் காலக்கெடு விதிக்கிறோம். அப்படி தை 1திற்குள் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு உதவி செய்யுங்கள். அப்படி உதவி செய்யவில்லை என்றால் உங்களை கண்டித்து சென்னையில் வாரிசு படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகள் முன்னர் உங்களுடைய உருவ பொம்மையை என்னுடைய தலைமையில் தமிழர் முன்னேற்ற படையினர் எரிக்கும்.

விஜய் கொடுத்தாக 50 ஆயிரம் ரூபாய் :

இதற்க்கு பிறகு சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் எந்த தமிழனும் உங்களுடைய படத்தை பார்க்க என்று ஆவேசத்துடன் கூறியிருந்தார். தற்போது அந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த நிலையில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தீக்காயம் காயம் ஏற்பட்ட அந்த சிறுமிக்கு விஜய் வழங்கியதாக ருபாய் 50ஆயிரத்தை ரசிகர்கள் அந்த சிறுமிக்கு வழங்கினர்.

Advertisement