அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த விஜய்..! முதல் வேலையாக கலைஞருக்கு அஞ்சலி.! நெகிழ்ச்சி வீடியோ.!

0
240
kalaingar

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கடந்த செவ்வாய் கிழமை மாலை (ஆகஸ்ட் 7) காலமானார்.அவரது மறைவையொட்டி அவரது உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும், திரையுலக நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

ஆனால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கலைஞரின் மறைவிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. அந்த சமயம் நடிகர் விஜய் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்ததால் அவரால் வர இயலவில்லை. இருப்பினும் அவரது சார்பாக்க நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, கலைஞரின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை வந்தடைந்துள்ளார் விஜய். இன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த நடிகர் விஜய் பின்னர் அங்கிருந்து நேராக சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலைஞர் அவர்களின் சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கலைஞர் அவர்களின் மறைவின் போது அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் நேரில் வரவில்லை என்றாலும், கலைஞர் அவர்களின் மறைவிற்கு மரியாதையை செலுத்தும் வகையில் ‘சர்கார் ‘ படத்தின் படப்பிடிப்பை ஒரு நாள் நிறுத்தி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.