Wig கேலிக்கு உள்ளான விஜய்யின் லேட்டஸ்ட் Selfie – விஜய்யின் Hairstylist பேசிய வீடியோ வைத்து விஜய் ரசிகர்கள் பதிலடி.

0
796
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். விஜய்யின் முதல் படம் துவங்கி தற்போது வரை அவரது உருவத்தை பற்றிய பல விமர்சங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் சமீப காலமாக நடிகர் விஜய் பல்வேறு படங்களில் ஒரிஜினல் முடி வைத்து நடிக்கவில்லை என்ற பல கேலி கிண்டல் இருக்கத்தான் செய்து வருகிறது. அவ்வளவு ஏன் நடிகர் விஜய் தெறி, மெர்சல், பைரவா போன்ற பல படங்களில் விக் வைத்து தான் நடித்தார்.

-விளம்பரம்-

அவ்வளவு ஏன் மாஸ்டர் படத்திற்கு முன் வந்த பிகில் படத்தில் கூட பிகில் கதாபாத்திரத்தில் விக் வைத்து தான் நடித்தார் விஜய். இதை தொடர்ந்து இறுதியாக வெளியான ‘பீஸ்ட்’ படத்திலும் விஜய் விக் வைத்து தான் நடித்து இருந்தார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

- Advertisement -

விஜய் வாரிசு :

வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

விஜய்யின் லேட்டஸ்ட் selfie :

சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜா நடைபெற்றது. இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஹைதிராபாத்தில் நடைபெற்றது. கடந்த சில தினங்களாகவே வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ராஷ்மிகா விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானது.

-விளம்பரம்-

விக் கேலிக்கு உள்ளான விஜய் :

அதில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் பெரும் கேலிக்கு உள்ளாகி வருகிறது. அதிலும் விஜய்யின் இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரத்தில் லெஜெண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ஹேர் ஸ்டைலில் புகைப்படம் ஒன்றை போட்டிருந்தார். அதில் விஜய்யை போலவே ஹேர் புதிய ஹேர் ஸ்டைலில் இருந்தார் சரவணன். இப்படி ஒரு நிலையில் இவரது இந்த புகைப்படத்தை விஜய்யுடன் ஒப்பிட்டு பலர் கலாய்த்து வருகின்றனர்.

அதிலும் அஜித் ரசிகர்கள் பலரும் விஜய்யை கேலி செய்ய விஜய் ரசிகர்கள் அஜித்தையும் லெஜெண்ட் சரவணனையும் கேலி செய்ய துவங்கிவிட்டனர். மேலும், விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்த கேலிக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதிலும் விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவர் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கின்றனர். அதில் அவர் விஜய் ஹேர் ஸ்டைல் குறித்த காரணத்தை கூறி இருக்கிறார்.

Advertisement