தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக உள்ளார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். அதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக அரசு அறிவித்து இருந்தது. வழக்கம் போல் இதில் எதிர் கட்சி அதிமுக, ஆளும் கட்சி திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டி இட்டார்கள். அதில் விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் அனுமதி பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. மக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து இருந்தார்கள்.

Advertisement

விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்ற இடங்கள்:

இந்த நிலையில் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி முடிவு வெளிவந்தது. அதிலும் விஜய் மக்கள் கட்சி இயக்கம் எந்த தொகுதியில் வெற்றி பெற்றார்? என்று ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருந்தார்கள். அந்த வகையில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தி உள்ளனர். தேர்தல் முடிவுகளின்படி புதுக்கோட்டை நகராட்சி 4 ஆவது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3 ஆவது வார்டில் போட்டியிட்ட மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட்ட வேல்முருகன், திருச்சி மாவட்டத்திம் பூவாலூர் பேரூராட்சி 15 ஆவது வார்டில் போட்டியிட்ட V.மேனகா, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21 ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது கவுஸ் ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம் வெற்றி :

அதுமட்டும் இல்லாமல் சென்னை மாநகராட்சி திமுக கோட்டையாக உள்ள நிலையில் அதிமுக பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு சென்னையில் திமுகவுக்கு போட்டியாக விஜய் மக்கள் இயக்கம் அமைந்துள்ளது. திமுக வேட்பாளர் நிலவரசி வெற்றி பெற்ற நிலையில் 2-வது இடத்தை விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த அறிவுச் செல்வி பிடித்துள்ளார். மேலும், எந்த ஒரு பிரச்சாரம் இல்லாமல், நடிகர் விஜய்யின் பிரச்சாரம் இல்லை, சரியான கொடி, சின்னம் இல்லாமல், தேர்தல் ஆணையத்துடன் அறிவுரையும் இல்லாமல் தனியாக நின்று விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றிருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.

Advertisement

அதிமுகவை முந்தி சென்ற விஜய் மக்கள் இயக்கம்;

இந்நிலையில் அறிவுச் செல்வி அதிமுகவை முந்தி இருப்பதை குறித்து பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார்.
அதில் அவர் கூறியது, என் கணவர் குணசேகரன் 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேர்தலில் போட்டி பெற்று கவுன்சிலர் ஆக பதிவி ஏற்று இருந்தார். பின் அவர் அதிமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட முடிவெடுத்தார். இந்த நிலையில் 136 வது வார்டு பெண்களுக்கான வார்டாக நான் நின்றேன். என் கணவர் முன்பே இந்த வார்டில் உறுப்பினராக இருந்தவர். அவருக்கு இந்த வார்டின் பிரச்சனைகள் நன்றாக தெரியும். ஆனால், இந்த முறை என் கணவர் போட்டியிட முடியாததால் நான் போட்டியிட்டேன். சுயேச்சையாக தான் நின்றோம்.

Advertisement

அறிவுச் செல்வி அளித்த பேட்டி:

பிறகு விஜய் மக்கள் இயக்கத்தினர் எங்களை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவிப்பதாக கூறி இருந்தார்கள். அதற்கு பிறகு தான் நாங்கள் அவருடன் இணைந்தோம். அவர்கள் தான் எங்களை தேடி வந்து ஆதரவு தெரிவித்தார்கள். நாங்கள் ஒப்புக்கொண்டோம். என் கணவரின் அரசியல் செல்வாக்கும், விஜய் ரசிகர்களின் ஆதரவும் தான் இந்த வாக்கு எண்ணிக்கை சாத்தியமானது. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பிறகு எங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது உணரமுடிந்தது. ரசிகர்கள் வேட்பாளராக களமிறங்குவது ஒருபுறம் என்றாலும் சுயேச்சை வேட்பாளர்கள் குறிப்பிட்டவர்கள் தேர்வு செய்து ஆதரவு வழங்கும் வேலையையும் விஜய் மக்கள் இயக்கம் செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement