கிரிக்கெட் பார்க்க சென்ற விஜய் மல்லையா.! திருடன் திருடன் என்று கத்தி வெளியேற்றிய இந்தியர்கள்.! வைரல் வீடியோ.!

By Rajkumar · 10/6/2019

நேற்று (ஜூன் 9) நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியினை நேரில் காண சென்ற பிரபல கிங்பிஷர் நிறுவனத்தில் ஓனர் விஜய் மல்லையாவை இந்தியர்கள் திருடன் திருடன் என்று கத்தி வெளியேற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://twitter.com/ANI/status/1137802945750360064

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி நேற்று மதியம் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தநிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையும் படியுங்க : பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் மாற்றம்.! அப்போ அந்த சீரியல் கதி.! 

இந்தப் போட்டியை காண, பிரபல தொழிலதிபரும் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பியவருமான விஜய் மல்லையா, ஓவல் மைதானத்துக்கு நேற்று வந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பேசியபோது, தான் விளையாட்டுப் போட்டியைக் காண வந்ததாகத் தெரிவித்துவிட்டு மைதானத்துக்குள் சென்றார்.

இந்த போட்டி முடிந்து வெளியே வந்த அவரை, இந்திய ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். ‘திருடன் திருடன்’ எனக் கூச்சலிட்டனர். இதனால் அவர் கடுப்பானார். அவரிடம் செய்தியாளர்கள் பேசியபோது, ‘’என் தாய் காயமடையவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதனை கேட்டதும் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் கேள் என்றும் ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

https://twitter.com/TheVijayMallya/status/1137781597653098497

வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த ஏற்கனவே லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் விஜய் மல்லையா சுதந்திரமாக இங்கிலாந்தில் சுற்றி திரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full