விஜய் டிவியில் இன்னும் சில ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களை போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.
இந்த மூன்றாவது சீசன் வரும் 23 ஆம் தேதி துவங்க உள்ளது என்று விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சி தொடர்பான இரண்டு ப்ரோமோ விடீயோக்களை மட்டும் விஜய் டிவி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தை மற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க : நிஜ ஜோடியாக மாற போகிறார்களா திருமண சீரியல் ஜோடி.! இயக்குனர் சொன்ன தகவல்.!
கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசன் நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சிலர் சோகமடைந்துள்ளனர்.
அதற்கு முக்கிய காரணமே தற்போது விஜய் டிவியில் 9 மணிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எனவே, தற்போது இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனேவ, இந்த தொடர் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் எந்த நேரத்தில் ஒளிபரப்பபடும் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
மேலும், போட்டியாளர்களை பொறுத்து வரை ஓகே ஓகே படத்தில் நடித்த ஜாங்கிரி மட்டும் உறுதியாகியுள்ளார். அதே போல சமீபத்தில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் ஒன்றும் வெளியானது . எனவே, பிரியங்காவும் போட்டியாளராக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.