தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. தற்போது விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும், பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, விஜய் ஒரு கார் பிரியர். இவரிடத்தில் ஏகப்பட்ட கார் கலெக்ஷன் இருக்கிறது.

அந்த வகையில் விஜயிடம் கலெக்ஷன் விலை அதிகமான காரில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார். நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்திருக்கிறார். அந்த காருக்கு நுழைவு வரி ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தனி நீதிபதி ஒருவர், ரீல் நடிகர்களாக இல்லாமல் ரியலாக இருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்து பேசி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் இருந்தார்.

Advertisement

ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம் :

இதனால் மனவேதனை அடைந்த விஜய் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நீதிபதி கூறிய கருத்தை நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இப்படி இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததற்கு தற்போது விஜய்க்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் 2005 ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ரக கார் வாங்கியிருந்தார்.

Bmw மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் சர்ச்சை :

இந்த கார் 63 லட்ச ரூபாய். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த காருக்கான சுங்க வரியை முறையாக செலுத்திவிட்டு தான் விஜய் இந்தியாவிற்கு இறக்குமதி செய்து இருந்தார். இந்த நிலையில் மாநில நுழைவு வரியை தமிழக அரசு வாங்குவதற்கான அதிகாரம் உள்ளது என்று நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 ரக கார் வரியை தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி விஜய் தன் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 7.98 லட்சத்தை மாநில அரசுக்கு செலுத்தினார்.

Advertisement

காருக்கு இன்சூரன்ஸ் இல்லையா :

இப்படி காரால் விஜய்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் நடிகர் விஜய் தனது காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லை என்ற புதிய சர்ச்சை கிளம்பியது. தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பொதுவாக எந்த தேர்தல் என்றாலும் வாக்களிக்க தவறாதா விஜய் அவர்கள் இந்த தேர்தலுக்கும் சென்னை நீலாங்கரையில் அமைந்து உள்ள வாக்குச்சாவடிக்கு 7மணிக்கு சென்று இருந்தார். மேலும், ஒரு சிகப்பு நிற மாருதி கார் ஒன்றில் வந்து இருந்தார்.

Advertisement

விஜய் தரப்பில் இருந்து விளக்கம் :

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு சைக்கிளில் வந்த விஜய் இந்த ஆண்டு காரில் சென்று வாக்களித்தார். இப்படி ஒரு நிலையில விஜய் வந்த TN07CS7967 நம்பர் கொண்ட அந்த கார் ஜோசப் விஜய் என்ற பெயரில் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்துடனே இந்த காரின் இன்சுரன்ஸ் முடிந்திருக்கிறது. இது வரை அதற்கு பிறகு இன்சுரன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை என்றும் சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் ஆனால் அந்த காருக்கு நிலுவை தேதி மே 28, 2022 வரை இருப்பதாக கூறி அதன் ஆதாரத்தை விஜய் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.

Advertisement