கட்டையா ஒடச்சிகிட்டு இன்ஸ்டால்மென்ட்ல போக்குடாது – மாஸனா மாஸ்டர் ப்ரோமோ.

0
813
master
- Advertisement -

இளைய தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார். கடந்த நவம்பர் 11 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்தது.

-விளம்பரம்-

மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவாது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருந்தனர்.மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படத்தை Ott யில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதாலும் ரசிகர்களும் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

பல கோடிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டால் வசூலில் நிச்சயம் துண்டு விழும் என்று பலரும் கருதினர். இதனால் படம் வெளியாகாது என்றும் கூறப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. 50 % அனுமதியால் திரையரங்குகளில் காட்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்துகொண்டு இருந்தனர். ஆனால், ட்ரைலரை வெளியிடாமல் இருந்த மாஸ்டர் படக்குழு தினமும் ஒரு சிறிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிங்கர்களை குஷியில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று விஜய்யின் ஆக்ஷன் பிளாக்கில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement