தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது விஜய் மற்றும் அஜித் தான். இதில் விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் விஜய் தனது படங்களில் அரசியல் கலந்த வசனங்களை பேசி அரசியலுக்கு வருவாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்.

அதே போல அஜித் போன்ற நல்ல மனிதர் அரசியலுக்கு வர வேண்டும் என்று பல்வேறு பிரபலங்களும் ஏற்கனவே கூறிவிட்டனர். அதற்கு ஏற்றார் போல தான் சமீப காலமாகவே விஜய் படங்களில் அரசியல் வசனங்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது. அதே போல விஜய்க்கு ஆதரவாக தேசிய மாற்றிய மாநில காட்சிகள் கூட இப்போதே கொக்கி போட ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் தான் கூட நடிகர் விஜய் தனது தந்தை எஸ் ஏ சியுடன் டெல்லிக்கு சென்று பா ஜ கவில் இணையப்போவதாக செய்திகள் வெளியானது.

Advertisement

ஆனால், அந்த தகவலை மறுத்தார் எஸ் ஏ சந்திரசேகர். ஆனால், விஜய்யின் மக்கள் மன்றங்கள் அரசியல் கட்சியாக மாறும் என்றும் கூறி இருந்தார். இது ஒரு புறம் இருக்க`ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு தகுதியான தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. அந்த இடத்தை தளபதி நிரப்புவார்’ என்றும், `நாளைய முதல்வரே’, `இளம் தலைவரே’ எனத் திருச்சி மாவட்டம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்திக் கொண்டி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் திருச்சி உள்பட புதிதாக இணைந்த மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையில், மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். கடன் வாங்காமல் உதவிகளை செய்யுங்கள். வழக்கம் போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும்.செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி பெற்றோரை நல்லபடியாக கவனித்து கொள்ளுங்கள் என்று மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினாராம். இதுகுறித்து விஜய் ரசிகர்களிடம் பேசிய போது தகுதியே இல்லாதவர்கள் எல்லாம் ஆட்சி கட்டிலில் அமரும் போது என்நேரமும் மக்களைப்பற்றி யோசிக்கும் எங்களது தளபதி ஆட்சியில் கட்டிலில் அமர்ந்தால் என்ன தவறு. எங்க தலைவருடைய அப்பா சொல்லிட்டாரு. இனி எங்க தலைவரை ஆட்சிக் கட்டிலில் அமரவைப்போம்” என்று கூறியுள்ளனர்.

Advertisement
Advertisement