தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இவர்தான் விஜய்யை சினிமாவில் அறிமுகம் செய்தார். இவரின் தாய் பாடகர், எழுத்தாளர் ,மற்றும் நடிகை என பன்முகங்களை கொண்டவர் இப்படி கலை குடும்பமாக விஜய்யின் குடும்பம் இருப்பது பலரும் அறிந்ததே. ஆனால் விஜயின் அம்மா சோபா பல படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்றுதான்.

விஜய்யின் தாய் ஷோபா தொடக்கத்தில் மெல்லிசை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தார். பின்னர் “மலர்கள்” படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஒரு மகாராஜா, ஒரு மகாராணி பாடலை பாடியிருந்தார். எம் ஏ சந்திரசேகர் இயக்கிய அவள் ஒரு பச்சை குழந்தை படத்தில் ஒரு பாடலை பாடினார். தொடர்ந்து தன்னுடைய கணவர் எஸ் ஏ சந்திரசேகரின் பல படங்களில் பாடல்களை பாடினார்.மேலும் ஆன்மீக பாடல்களையும் படியுள்ளார்.

Advertisement

சட்டம் ஒரு இருட்டறை :

அதேபோல தன்னுடைய கணவர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” படத்தில் ஷோபா தான் கதை எழுதியிருந்தார். படம் நடிகர் விஜயகாந்திற்கு மட்டுமல்ல சந்திரசேகர் அவர்களுக்கும் இரண்டாவது படம். இப்படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து திரைத்துறையில் இவர்களை அறிமுகப்படுத்தியது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த படம் 100 நாட்களுக்கு மேலே ஓடி சாதனை படைத்தது. சட்டம் ஒரு இருட்டறைக்கு பின்னர் விஜய் அறிமுக “நாளைய தீர்ப்பு” என பல படங்களை அவருடைய தாய் ஷோபா கதை எழுதி இருக்கிறார்.

நண்பர்கள் படம் :

இந்நிலையில் ஷோபா இயக்கிய முதல் படம் என்றால் அது “நண்பர்கள்” இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது. நீரஜ், மம்தா, விவேக், கலப்பூட்டினர், ஜி எம் சுந்தர் என பல நடிகர்கள் நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட காதல் கதையை கொண்ட இப்படம் அன்றைய ரசிகர்களின் விருப்பமான படமாக இருந்தது. இடப்பதில் கதாநாயகனின் பெயர் விஜய் என்று வைத்திருந்தார் ஷோபா. படத்தின் டைட்டிலில் அவரது பெயர் தனியாக வந்திருந்தது. இப்படி தமிழில் ஹிட் கொடுத்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த எஸ் ஏ சந்திரசேகர் படம் தோல்வியடைந்தது.

Advertisement

கடைசியாக இயக்கிய படம் :

இப்படத்திற்கு பிறகு இசை மழை என்ற படத்தை ஷோபா இயக்கியிருந்தார், இப்படத்தை விஜய் தயாரித்திருந்தார், நண்பர்கள் படத்தை போல இப்படத்திலும் கதாநாயகனின் பெயர் விஜய் தான். இப்படத்தில் வரும் இளையராஜா பாடல்கள் பெரிய ஹிட் அடித்த நிலையில் படம் அந்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் கதை எழுதுவதுடன் மட்டுமே தன்னுடைய சினிமா ஆர்வத்தை வைத்துக்கொண்டார். இவரின் நண்பர்கள் படம் நேற்றுதான் தன்னுடைய 32வது வருடத்தை நிறைவு செய்தது. விஜய்யின் தாய் ஷோபா 50 படங்களுக்கு மேலே கதை எழுதி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement