தனது ஆசைக்காக தனது மகன் விஜய் கட்டிய கோவில் குறித்து விஜயின் தாயார் ஷோபா உருக்கமுடன் பேசி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மேலும், விஜய் அவர்கள் தன்னுடைய தாய் சோபாவிற்காக சாய் பாபா கோயில் ஒன்றை கட்டி இருக்கிறார். விஜய்க்கு சொந்தமாக கொரட்டூரில் நிலம் ஒன்று இருக்கிறது. அங்கு தான் தன்னுடைய தாயுக்கே தெரியாமல் ரகசியமாக விஜய் சாய் பாபா கோவிலை கட்டியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்த கோயிலுடைய கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவர் கிறிஸ்துவராக இருந்தாலும் தன்னுடைய தாய்க்காக இந்த கோயிலை கட்டித் தந்திருக்கிறார்.
விஜய் கட்டிய கோவில்:
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் மும்பையில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதே போல் ஒரு கோவிலை அமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். பின் தன்னுடைய கட்சி தொடங்கிய அதே மாதத்தில் தான் இந்த கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் தமிழக வெற்றிக்கழக ஆலோசகர் புஸ்ஸி ஆனந்த், விஜயினுடைய தாய் சோபா ஆகியோர் கலந்திருந்தார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இந்த கோவிலுக்கு வந்த ஷோபா, சாமி தரிசனம் செய்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘ரொம்ப நாளா விஜய்யிடடம் நம்முடைய இடத்தில், உன் பெயரில் உள்ள இடத்தில் ஒரு பாபா கோவில் கட்ட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று அவரிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
ஷோபா நெகிழ்ச்சி :
அதை அவர் கட்டி விட்டார். நான் இந்த கோவிலுக்கு வியாழக்கிழமை வியாழக்கிழமை வந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் வந்து பாபாவிடம் வேண்டிக் கொண்டு அனைத்து நன்மைகளையும் பெற வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். தற்போது விஜய் சினிமாவை தாண்டி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
தாய்க்காக பிரமாண்டமான கோவிலை கட்டிக்கொடுத்த விஜய்.. கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற வைரல் வீடியோ!#vijay #ThalapathyVijay #saibabatemple #NewsTamil24x7 pic.twitter.com/STUoXYDNNc
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) April 9, 2024
விஜய்யின் கடைசி படம் :
இதனால் விரைவில் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து இருந்தார். தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து தனது அடுத்த படமான ‘தளபதி 69’ படத்துடன் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.