விஜய் பட நடிகையை பார்த்து ஓடும் பாலிவுட் பிரபலங்கள் – அந்த நடிகை யார்?

0
2881

நடிகைகள் ஆரம்பத்தில் ஒரு கணிசமான மார்க்கெட்டை பிடித்து விட்டால் அதனை தக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல, பெரும் பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட திடீரென காணாமல் போய் விடுவார்கள். அப்படியாக தமிழில் தளபதியுடன் நடித்த அந்த மூன்றெழுத்து நடிகைக்கு தற்போது மார்க்கெட் சுத்தமாக இல்லை.

ileana
மார்க்கெட் இழந்துவிட்டால் எப்படியாவது முன்னர் வைத்திருந்த மார்க்கெட்டில் பாதியாவது பிடித்துவிடவேண்டும் என கடினமாக உழைப்பார்கள் நடிகைகள். ஒரு கட்டத்தில் நல்ல மார்க்கெட் இருக்கும் போது தான் நடித்த படத்தின் பிரமோசனுக்கு கூட வராமல் இருக்கும் நடிகைகள், மார்க்கெட் இழந்துவிட்டால் அனைத்து சினிமா விழாக்களிலும் தவறாமல் கலந்துகொண்டு தங்களை முன்னிலை படுத்திக்கொள்ள முயல்வார்கள்.

அதேபோல் தான் இந்த மார்க்கெட் இழந்த மூன்றெழுத்து நடிகையும் பாலிவுட்டில் மிகப்பிரபலமாக பல விருதுகளை வென்றவர். மார்க்கெட் போனதும், எப்படியாவது தான் இழந்த மார்க்கெட்டை பிடிக்க படு பயங்கரமாக முயற்சி செய்து வருகிறார்.

ileana

இதனால், அங்கு நடக்கும் அனைத்து சினிமா பார்ட்டிக்கும் சென்றுவிடுகிறார். பார்ட்டிக்கு வரும் அனைத்து பிரபலங்களையும் பிடித்து செல்பி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் போடுகிறாராம். இதனால், அவரை பார்த்தாலே ‘செல்பி பைத்தியம்’ என தெறித்து ஓடுகின்றனறாம் பாலிவுட் பிரபலங்கள். யார் அந்த மூன்றெழுத்து நடிகை?? கமென்ட்டில் பதிவிடவும்.