பிரபல பாலிவுட் நடிகை அமீஷா படேல் மீது 2.5 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும்,அவரை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை அமீஷா படேல் ஹிந்தியில் பிரபலமான திரைப்பட நடிகை ஆவார். அதோடு இவர் தமிழில் 2003-இல் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘புதிய கீதை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அதற்கு பின் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் வரல போல் இருக்கு.தமிழ் படங்களில் நடிகை அமீஷா படேலை பார்க்கவே முடியல. நடிகை அமீஷா படேல் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் கூட தமிழக ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார். நடிகை அமீஷா படேல் ஹிந்தியிலே பல படங்களில் நடித்து வருகிறார்.

அது மட்டும் இல்லைங்க இவர் பல படங்களைத் தயாரித்தும் உள்ளார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு அமீஷா படேல் அவர்கள் தன்னுடைய பார்ட்னருடன் இணைந்து “தேசி மேஜிக்” என்ற படத்தைத் தயாரிப்பதற்காக ராஞ்சியைச் சேர்ந்த தயாரிப்பாளர் அஜய்குமார் சிங் என்பவரிடம் 2.5 கோடி ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார். ஆனால்,”தேசி மேஜிக்” என்ற படத்தைத் தயாரித்தும் தற்போது வரை அந்த படத்தை வெளியிட இல்லை.என்ன பிரச்னை என்று தெரியவில்லை? அதனால் அந்த படத்தை நம்பி பணத்தைக் கொடுத்த அஜய்குமார் சிங் எனக்கு பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு நடிகை அமீஷா பட்டேலும் வட்டியும், முதலுமாக சேர்த்து 3 கோடி ரூபாய்க்கான செக்கை எழுதிக்கொடுத்தார்.

இதையும் பாருங்க : சர்காரை போல பிகிலும் திருட்டு கதையா.. ரிலீசுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்..

Advertisement

உடனே அவர் செக்கை வங்கியில் கொடுத்தவுடன் செக் பவுன்ஸ் ஆகி விட்டது எனக் கூறினார்கள். இதனால் கோபமடைந்த அஜய்குமார் சிங் அவர்கள் நடிகை அமீஷா பட்டேல் மீது செக் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளார். கடன் கேட்டிருந்தார். வங்கியில் செக் பவுன்ஸ் ஆயிடுச்சி என்று அஜய்குமார் தகவல் தொடர்பு மூலம் அமீஷா படேலிடம் கேட்டார்.ஆனால், அதற்கு அமீஷா படேல் சரியாக பதில் கூறாமல் வந்திருந்தார். மேலும், பல முறை அஜய்குமார் சிங் கேட்டும் பதில் அளிக்க வில்லை.இதனைத்தொடர்ந்து தயாரிப்பாளர் அஜய்குமார் சிங் அவர்கள் ராஞ்சி சிவில் நீதிமன்றத்தில் நடிகை அமிஷா பட்டேல் மீது வழக்கு தொடுத்தார்.

மேலும், வழக்கிலும் கூட நடிகை அமீஷா பட்டேல் சரியாக பதில் கூறவும் இல்லை, ஆஜர் ஆகவும் இல்லை.இதனையடுத்து நடிகை அமீஷா பட்டேல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத காரணத்தினால் அவரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியது.மேலும்,கைது வாரண்டுடன் போலீசார் மும்பை சென்று உள்ளார்கள். இதனை தொடர்ந்து நடிகை அமீஷா பட்டேலை எப்ப வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் பாலிவுட்டில் பரவிவருகிறது. இது குறித்து நடிகை அமீஷா பட்டேல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அது என்னவென்றால், நான் ‘சட்டப்படி இந்த பிரச்சினையை எதிர்கொள்வேன்’ என்று கூறியிருந்தார்.

Advertisement
Advertisement