சர்காரை போல பிகிலும் திருட்டு கதையா.. ரிலீசுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்..

0
1530
Bigil
- Advertisement -

விஜய் ,அ ட்லியும் இணைந்து தெறி, மெர்சல் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தந்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக பிகில் படத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான “பிகில்” படம் இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று திரையரங்குக்கு வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது.இந்த ‘பிகில்’ படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.மேலும், இந்தப் படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். விஜய்யின் ‘பிகில்’ படம் ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும், ஆவலையும் தூண்டியுள்ளது. பிகில் படத்தின் ட்ரைலர் வந்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது.

-விளம்பரம்-
Bigil

சினிமா உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நம்ம தளபதி விஜய் படத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.பிகில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோதே இயக்குனர் செல்வா அவர்கள் இந்த படம் என்னுடைய கதையில் இருந்து திருடி எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட படம் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவிட்டிருந்தார்.இதனால், பிகில் படம் குறித்து விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.பிகில் படம் திரையரங்குகளுக்கு வர இன்னும் சில நாட்கள்தான் இருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருகின்றனர் என இணையங்களில் கூறுகின்றன.

- Advertisement -

மேலும், பிகில் படம் வெளிவருவதற்கு அரசியல்வாதிகள் மூலமாகத்தான் பிரச்சினை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தற்போது சினிமா திரையில் உள்ள பிரபலங்கள் மூலமே வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.இந்நிலையில் உதவி இயக்குனர் செல்வா அவர்கள் தன்னுடைய கதையில் இருந்து எடுக்கப்பட்டு உருவாக்கிய படம் தான் பிகில் என்று என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.இந்த வருடம் தீபாவளிக்கு பிகில் படம் திரையரங்குகளில் ஒரு கலக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது எல்லாம் வீணா! போகும் என்று அதிர்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள். ஆனால், படம் வெளியாக பல தடைகள் வந்து கொண்டிருந்தன.இது குறித்து விசாரித்தபோது பிகில் படத்தின் படப்பிடிப்பின் போதே இயக்குனர் செல்வா அவர்கள் இந்த படம் தன்னுடைய கதையில் இருந்து திருடி எடுக்கப்பட்டது என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Image result for murugadoss vijay

ஆனால், அந்த வழக்குக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் படம் முழுவதுமாக எடுத்து முடித்து, இதற்கு முதல் கட்டமாக இசை வெளியீட்டு விழா முடிந்து விட்டது. மேலும், சில தினங்களுக்கு முன்பு கூட பிகில் படத்தின் டிரைலர் வந்து வேற லெவல்ல நம்ம விஜய் தெறிக்கவிட்டுருந்தார்.இதை பார்த்துவிட்டு கே.பி. செல்வா அவர்கள் பிகில் கதை என்னுடையது தான் என ஆணித்தரமாக கூறி வருகிறார். மேலும், இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.முன்பு நடந்தது போலவே ஆதாரங்கள் இல்லாமல், எந்த ஒரு தடையும் இல்லாமல் பிகில் படம் தீபாவளியன்று திரையரங்குக்கு வர வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்

-விளம்பரம்-
Advertisement