இளம் வயதில் நீச்சல் உடையில் நடித்துள்ள சங்கவி – கொடுத்து வச்சவங்கபா 90ஸ் கிட்ஸ்.

0
6574
- Advertisement -

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வந்த நடிகைகள் தற்போது செகண்ட் இன்னிங்ஸ்சில் வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அந்த வகையில் நடிகை சங்கவியும் தெரியும். நடிகை சங்கவி 1977ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் காவியா ரமேஷ். இவருடைய பாட்டி ஒரு கன்னட நடிகை. தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலம் ஆனார். அந்த படமே இவருக்கு அறிமுக படமாக இருந்தது.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவருடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் 95 படங்களுக்கு மேல் நடித்தார். விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த், கமல் சரத்குமார், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் சங்கவி.

- Advertisement -

அஜித்துடன் அமராவதி, விஜயுடன் கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், இளம் வயதில் படு கவர்ச்சியாக நடித்து உள்ள சங்கவி நீச்சல் உடைகளில் கூட படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடிகை சங்கவிக்கு 30 வயதை தாண்டியவுடன் பட வாய்ப்புகள் குறைந்தது. இருந்தும் கோகுலத்தில் சீதை, சாவித்ரி ஆகிய சீரியல்களிலும் நடித்தார் சங்கவி. சங்கவி கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 38 வயதில் ஒரு ஐ.டி கம்பெனி ஒனருடன் பெங்களூரில் திருமணம் செய்துகொண்டார். தனது 42 வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சங்கவி.

-விளம்பரம்-
Advertisement