டேக் செய்த இலங்கை இளைஞர் – ட்விட்டர் Dpயை மாற்றிய விஜய். பின்னணி இதோ.

0
630
vijay
- Advertisement -

முதன்முதலாக ரசிகர் செய்த டிசைனை விஜய் டிபியாக வைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

விஜயின் வாரிசு பட புகைப்படத்தை டிசைன் செய்த ரசிகர்:

இது ஒரு பக்கம் இருக்க, விஜயின் வாரிசு பட புகைப்படத்தை அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் டிசைன் செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தை தான் விஜய் அவர்கள் தற்போது டீவ்ட்டர் டிபியாக வைத்திருக்கிறார். அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விஜயின் புகைப்படத்தை டிசைன் செய்த இலங்கை தமிழர் இளைஞர் கஜேந்திரன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இலங்கைத் தமிழர். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் யாழ்ப்பாணத்தில் தான். இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்திருக்கிறேன்.

கஜேந்திரன் அளித்த பேட்டி:

அது மட்டும் இல்லாமல் எனக்கு டிசைனிங்கிலும் ஆர்வம் அதிகம். ஃப்ரீலான்ஸரா ஃபோட்டோ டிசைனிங் செய்து கொடுக்கிறேன். சிறுவயதில் இருந்தே நான் விஜய் சாரோட தீவிர ரசிகன். அவருடைய துள்ளாத மனமும் துள்ளும், கில்லி போன்ற பல படங்கள் என்னுடைய பேவரைட். மேலும், டிசைனிங் கற்றுக் கொண்ட பிறகு பிகில் படத்துக்காக நான் முதன்முதலாக அவருடைய போட்டோவை டிசைன் பண்ணேன். தொடர்ந்து அவருடைய நிறைய போட்டோக்களை டிசைன் பண்ணி என்னோட ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறேன். அப்படித்தான் வாரிசு பட போட்டோவையும் டிசைன் பண்ணினேன். அதை நான் அவருடைய ட்விட்டரில் ஷேர் செய்து இருந்தேன்.

-விளம்பரம்-

விஜய் வைத்த டிபி:

பின் இரண்டு நாட்கள் கழித்து திடீரென்று அவர் twitter பேஜ் டிபியா அந்த புகைப்படத்தை விஜய் சார் வைத்திருந்தார். இதுவரைக்கும் ரசிகர் டிசைன் பண்ணின போட்டோவை அவர் வைத்ததே இல்லையாம். நான் டிசைன் பண்ணின போட்டோவை வைத்ததில் எனக்கு சொல்ல முடியாத சந்தோஷம். ஒரே வாழ்த்துக்கள் மழை குவிந்தது. இதனால் நான் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போய் விட்டேன். என்னோட படைப்பு அவரோட பார்வைக்கு போனதே எனக்கு சந்தோஷம். எல்லா டிசைனருக்கும் நம்மளோட டிசைன் ரீச் ஆகணும் என்ற கனவு இருக்கும்.

கஜேந்திரன் குறித்த தகவல்:

அந்த கனவு என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப நன்றி விஜய் சார். நான் இதை எப்போதுமே மறக்க மாட்டேன். உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய லைப்பில் ஒரே ஒரு ஆசை என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் கஜேந்திரன் விக்ரம் பட கமலின் புகைப்படத்தை டிசைனை செய்து விக்ரம் பட நிகழ்ச்சியில் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதேபோல் இவர் பல பிரபலங்களின் புகைப்படத்தை டிசைன் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement