இந்நிலையில் இந்த படத்தின் முடிவிற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் கை கோர்க்க உள்ளதாகத் தெரிகிறது. அட்லீ இயக்கிய மூன்று படங்களில் இரண்டு விஜய்யை வைத்து இயக்கியதாகும். தெறி மற்றும் மெர்சல் என இயக்கிய இரண்டு படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.
மேலும், படத்திற்கான தலைப்பும் 'ஆளப்போறான் தமிழன்' எனவும் டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்-62 படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில் விஜய்-63க்கு டைட்டில் வைத்துள்ளதாக வெளியான செய்தியால் விஜய் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.சினிமாReading time · 1 min





