அஜித் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணைகிறாரா விஜய்? வெளியான புதிய தகவல்.!

0
693
Vijay-ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் ‘சிறுத்தை ‘என்ற ரீ-மேக் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சிவா. அந்த படத்திற்கு பின்னர் அஜித்தை மொத்த குத்தகை எடுத்த சிவா அஜித்தை வைத்து வீரம்,வேதாளம்,விவேகம் என்று தொடர்ந்து 3 படங்களை இயக்கிவிட்டார். 

-விளம்பரம்-
Vijay

சமீபத்தில் அஜித்துடன் நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ படத்தில் கைகோர்த்தார்ர் இயக்குனர் சிவா. இந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் தலையில் கை வைத்தனர்.

- Advertisement -

ஆனால், அது உண்மை இல்லை என்று தெரிந்ததும் தான் அஜித் ரசிகர்கள் சற்று ரிலாக்ஸ் ஆகினர். அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சிவாவும் தன்னுடைய அடுத்த படம் அஜித்துடன் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஆனால், சாதி ஜோதி நிறுவனம் சிவாவுடன் மற்றும் ஒரு படம் பண்ணும் என்று திட்டவட்டமாக தெரிவித்து.

அந்தப் படத்தில் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

Advertisement