ரஜினி படத்தின் கதை கேட்டதும் விஜய் சொன்னது இதுதான் – லோகேஷ் கனகராஜ் சொன்ன ஸ்வாரஸ்ய தகவல்.

0
1759
Lokesh
- Advertisement -

தலைவர் 171 படத்தின் கதையை கேட்டு விஜய் சொன்னதாக லோகேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் சினிமா மீது இருந்த ஆசையால் தன்னுடைய திரை பயணத்தை “களம்” என்ற படத்தின் மூலம் தான் தொடங்கினார். பின் “மாநகரம்” என்ற படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ். இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

- Advertisement -

லியோ படம்:

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தட், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்படுகிறது இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலரை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த லியோ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை எடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்குகிறார்.

-விளம்பரம்-

தலைவர் 171 படம்;

அந்த படத்திற்கு தலைவர் 171 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், ரஜினியின் 171வது படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னேன்.

விஜய் சொன்னது:

கதையை கேட்ட விஜய், வெறும் 10 நிமிடம் சொல்லும் எந்த கதையும் எனக்கு இதுவரை பிடித்ததில்லை. இது பயங்கரமா இருக்குடா என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே லோகேஷ் சொன்ன ஒன்லைன் கதையை கேட்டு தான் ரஜினியும் இந்த படத்திற்கு ஒத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.. கண்டிப்பாக லோகேஷ்- ரஜினி கூட்டணியில் உருவாகும் படம் கேங்ஸ்டர், ஆக்ஷன், திரில்லர் பாணியில் தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.

Advertisement