தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். கடந்த சில மாதத்திற்கு முன் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நன்முறையில் நடைபெற்றது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதமே மாஸ்டர் படம் ரிலீஸ் ஆக வேண்டியது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பணிகள், ரிலீஸ் தேதி எல்லாம் தள்ளி வைக்கப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு OTT நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் பார்த்து வருகின்றன. ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் OTT தளம் வழியாக படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement

தமிழில் முதல் படமாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் அமேசான் ப்ரைமில் வெளியானது. இதை தொடர்ந்து பல்வேறு புதிய படங்கள் OTT-யில் வெளியான நிலையில் சமீபத்தில் சூரரை போற்று திரைப்படமும் OTT யில் விற்கப்பட்டது. இதனிடையே மாஸ்டர் படமும் OTT-யில் வெளியாகி விடுமோ என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். ஆனால், மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் நேரடியாக வெளியாகும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறது படக்குழு.

இப்படி ரிலீஸுக்காக ரெடியாகியிருந்த மாஸ்டர் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கி, சிலவற்றைச் சேர்த்து, சில காட்சிகளை மட்டும் எடிட் செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்த எடிட் செய்யப்பட்ட வெர்ஷனை சமீபத்தில் பார்த்த விஜய் ரொம்பவே ஹேப்பி என்கிறார்கள். படம் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போக, லோகேஷை அழைத்துப் பாராட்டியதோடு, ”அடுத்து நிச்சயம் நாம சேர்ந்து படம் பண்ணலாம்” என்றும் சொல்லியிருக்கிறார்.

Advertisement
Advertisement