இந்தி படத்திலும் ஒலித்த விஜய்யின் பெயர். நெஞ்சை நிமிர்த்தும் தளபதி ரசிகர்கள்.

0
20113
Vijay
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை மேகா ஆகாஷ். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2017 ஆம் ஆண்டு ‘லை’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் நடிகை மேகா ஆகாஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த ‘பேட்ட’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களில் நடித்து உள்ளார். தற்போது நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சில படங்கள் மட்டும் நடித்தாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மேகா ஆகாஷ். பிறகு இவருக்கு தமிழில் பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றவுடன் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

வீடியோவில் 1மணி நேரம் 45 நிமிட காட்சியில் பார்க்கவும்

- Advertisement -

தற்போது இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் நடிகை மேகா ஆகாஷ் அவர்களுக்கு தமிழில் முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் இந்தியில் ஒரு படத்தில் யாருக்கும் தெரியாமல் நடித்து முடித்து உள்ளார். அந்த ஹிந்தி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த டிரைலரில் நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் கூறிய டயலாக் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. அது ‘நீ மகேஷ் பாபு ரசிகையா? என கேட்க அதற்கு நான் எப்போதும் தளபதி விஜய் ரசிகை’ என கூறி உள்ளார்.

இதன் மூலம் தளபதி விஜய்யின் புகழ் பாலிவுட்டிலும் பரவி வருகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து நடிகை மேகா ஆகாஷ் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் நீங்கள் விஜய் பிடிக்கும் என்றால் மற்ற நடிகர்களின் படத்தில் வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாக இருக்குமே என கேட்டதற்கு மேகா ஆகாஷ் அவர்கள் கூறியது, எனக்கு பொய் சொல்லத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் நச்சு என்று கூறி விட்டார்.

-விளம்பரம்-

இப்படி நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் பேசியதற்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் தெலுங்கில் மனோ சைத்ரா என்ற படத்திலும், தமிழில் ‘யாதும் ஓரே யாவரும் கேளிர்’ என்ற படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். யாதும் ஓரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.

Advertisement