பொதுவாக நடிகர்கள் சிலரின் படங்களில் டாப் நடிகைகளின் ரெபரென்ஸ்களை வைப்பது சகசமான ஒன்று தான். அதிலும் குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களின் ரெபரென்ஸ் பல படங்களில் நாம் பார்த்து இருப்போம் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட அஜித், கமல், சூர்யா என்று பல ரெபர்ன்ஸ் காட்சிகள் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் Netflix தளத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தில் விஜய்யை கேலி செய்து உள்ளதாக புதிய சர்ச்சையை கிளப்பியுட்டுள்ளார்கள் நெட்டிசன்கள்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 18 ஆம் தேதி Netflix Ott தளத்தில் வெளியாகி இருந்தது.லண்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட கேங்ஸ்டர் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராகவும் ஈழத்தமிழகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழர் போராடுகிறார்.

Advertisement

அவரை லண்டன் கேங்ஸ்டர் கும்பல், மதுரை தமிழரான தனுஷை வைத்து கொள்கின்றனர்.பின்னர் தனுஷ், அந்த தமிழ் போராளியின் வரலாற்றை தெரிந்து கொண்டு லண்டன் தாதாவை எதிர்த்து போராடுகிறார். பின்னர் தனுஷ் என்ன ஆனார், புலம்பெயர் தொழிலார்களுக்கு என்ன ஆனது என்பது தான் கதை. இந்த படம் மிகவும் சுமாரான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் விஜய்யை கேலி செய்து வசனம் இடம்பெற்று உள்ளதாக புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர் நெட்டிசன்கள்.இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் நடிகர் தனுஷ், அந்த அணில் பயன் நடுங்கிட்டான் என்று கூறிய வசனத்தை மற்றும் கட் செய்து இந்த வசனம் விஜய்யை கேலி செய்வது போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் கிளப்பியுட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. எதையாவது கிளப்பிவிட்டுடறாங்கபா.

Advertisement
Advertisement